Saturday, November 20, 2010

ரசம் வகைகள்

இஞ்சி-ஜீரா ரசம்

இஞ்சி-ஜீரா ரசம்
தேவையானவை:

*துவரம் பருப்பு - கால் படி
*ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
*புளி - 2 கொட்டைப்பாக்கு அளவு
*சிறிய தக்காளி - ஒன்று
*கடுகு - கால் தேக்கரண்டி
*பெருங்காயம் - ஒரு துண்டு
*இஞ்சி - ஒரு துண்டு
*ஜீரா - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - வாசனைக்கு
*கறிவேப்பிலை - வாசனைக்கு
*உப்பு - ஒரு தேக்கரண்வு

செய்முறை:

1.  இந்தச் சாற்றினை மேலாக இறுத்து வைத்துக் கொண்டால் சுண்ணாம்பு அடியில் தங்கிவிடும்.

2.  தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3.  பருப்பை அரை படி தண்ணீரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

4.  வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வைக்கவும்.

5. புளியை தண்ணீரில் ஊறவைத்து, ஒரு பாத்திரத்தில் புளிக்கரைச்சலாக எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைச்சலுடன் உப்பு, பெருங்காயம், நறுக்கிய தக்காளி, ரசப்பொடி, ஜீரகப் பொடி போட்டு 8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

6.  பிறகு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை போட்டு நுரைத்து வந்தவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு தாளித்த கடுகையும் போட்டு இறக்கிவைத்து இஞ்சி சாற்றை சேர்க்கவும்.
விருப்பமானால் அரை தேக்கரண்டி சீரகமும் தாளித்து சேர்க்கலாம்

*******************************************

2.  அரச்சுவிட்ட ரசம்

தேவையானவை:

*பருப்பு தண்ணீர் (அ) அரிசி களைந்த நீர் - 3 கப்
*தக்காளி - ஒன்று
*புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
*சீரகம் - ஒரு தேக்கரண்டி
*மிளகு - ஒரு தேக்கரண்டி
*பூண்டு - 4 பல்
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், எண்ணெய் - தாளிக்க
*கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  பருப்பு தண்ணீர் இல்லையென்றால் அரிசி களைந்து இரண்டாவதாக

2.  கழுவிய நீரில் புளியை ஊற வைக்கவும். சீரகம், பூண்டு மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

3.  தக்காளியை சுடு நீரில் போட்டு தோலுரித்து நசுக்கி வைத்து கொள்ளவும். எண்ணெயை காய வைத்து தாளிக்க கூறியுள்ளதை தாளிக்கவும்

4.  தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்

5.  புளி கரைசலை சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவும்

6. நுரைகட்டி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்
இறக்கி வைத்து மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்


******************************************

2.தேங்காய் பால் ரசம்

தேவையானவை:

*தேங்காய் துருவல் - ஒரு கப்
*சின்ன வெங்காயம் - 25
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 9
*எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
*தேங்காய் துருவல் - ஒரு கப்
*சின்ன வெங்காயம் - 25
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 9
*எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*கல் உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:


1. ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து கரைத்து ஒரு கப் அளவிற்கு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்

2.  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை போட்டு 30 நொடி வறுத்துக் கொள்ளவும்

3.  அதனுடன் வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

4.  வெங்காயம் வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைச்சல் ஊற்றி ஒரு கொதி வந்ததும், உப்பு போட்டு கலக்கி விடவும்

5.  பிறகு ஒரு தட்டை போட்டு மூடி வைத்து புளி வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்க விடவும்.

6. புளித்தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து 1 1/2 கப் அளவு பால் எடுக்கவும். பிழிந்து எடுத்த பாலை சக்கையில்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

7.  5 நிமிடம் கொதித்த பிறகு திறந்து தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி கொதி வரும் முன் இறக்கி விடவும். அதிகம் கொதிக்க விடக் கூடாது, பால் திரிந்து விடும்

8.  சுவையான தேங்காய் பால் ரசம் தயார்.

******************************


3.கண்டந்திப்பிலி ரசம்

தேவையானவை:

*கண்டந்திப்பிலி - ஒரு மேசைக்கரண்டி
*தக்காளி - ஒன்று
*கொத்தமல்லி - ஒரு கொத்து
*வேக வைத்த பருப்பு - கால் கப்
*புளி தண்ணீர் - அரை கப்
*உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
*மிளகு, சீரகப் பொடி - ஒரு தேக்கரண்டி
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*நெய் - 2 தேக்கரண்டி
*எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை

1.  தக்காளியை கழுவி விட்டு நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லியை ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவும். கண்டந்திப்பிலியை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

2.  ஒரு எண்ணெய் சட்டியில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைப் போட்டு கரண்டியை வைத்து நன்கு மசித்து விடவும்.

3.  அதனுடன் மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றரை தேக்கரண்டி கண்டந்திப்பிலிப் பொடி போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்

4.  ரசம் ஒரு கொதி வந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை அதனுடன் சேர்த்து கலக்கி விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். பருப்பு சேர்ப்பதால் ரசம் நன்கு சுவையாக இருக்கும்

5.  ரசம் 3 நிமிடம் நன்கு கொதித்து நுரைத்து வரும் போது மேலே கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

6.  பிறகு இரும்பு குழிக்கரண்டி அல்லது சிறிய வாணலியில் 2 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்

7.  கடுகு வெடித்ததும் மீதம் உள்ள கண்டந்திப்பிலி பொடியை போட்டு தாளித்து அதை ரசத்தில் ஊற்றி அதே கரண்டியை வைத்து ரசத்தை கலக்கி விடவும்.

8. இப்போது சுவையான கண்டந்திப்பிலி ரசம் தயார். உடல் அலுப்பினை போக்குவதற்கு இந்த கண்டந்திப்பிலி ரசம் கைகண்ட மருந்து.  உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது இந்த கண்டந்திப்பிலி
ரசம்

****************************************

4.மைசூர் ரசம்

ரச வகைகளில் மைசூர் ரசத்திற்கு என்றும் சிறப்பு உண்டு. மற்ற ரசங்களைவிட தயாரிப்பதற்கு சற்று நேரம் பிடிக்கும். தேங்காய் சேர்க்கப்படுவது இந்த ரசத்தின் சிறப்பு அம்சம். அலாதியான சுவையுடையது.

தேவையானவை:

*துவரம் பருப்பு - 4 மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 2
*மல்லி - 4 தேக்கரண்டி
*மிளகு - 2 தேக்கரண்டி
*சீரகம் - ஒரு தேக்கரண்டி
*தக்காளி - 2
*தேங்காய் துருவல் - கால் கப்
*மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - 2 கொத்து
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*உப்பு - அரை தேக்கரண்டி

செய்முறை:

1.  தக்காளியை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்

2.  ரசப்பொடி தயாரிக்க, துவரம் பருப்பில் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மல்லி, மிளகு, சீரகம் ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.

3.  முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் பருப்பைப் போட்டு நன்கு வேகவிடவும். பருப்பு வேக சற்று நேரம் எடுக்கும். அந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் கீழ்கண்டவற்றை செய்துகொள்ளவும்

4.  வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடி தயாரிக்க வைத்துள்ள துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், மல்லி, மிளகு, சீரகம் போட்டு சிவக்க வறுக்கவும்

5.  வறுத்து எடுத்தவற்றை ஆறவைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

6.  வாணலியில் எண்ணெயில்லாமல் தேங்காய் துருவலை போட்டு வறுத்து எடுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்துக் கொள்ளவும்

7.  புளியை ஒன்றரை கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்.

8.  வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து தக்காளியை போட்டு 30 நொடி வதக்கவும்

9.  தக்காளி சற்று வதங்கிய பின்பு, புளிக்கலவையை ஊற்றி சுமார் 3 நிமிடம் கொதிக்க விடவும்

10. அதில் 2 மேசைக்கரண்டி பொடித்த ரசப் பொடியை போட்டு ஒரு நிமிடம் வேகவிடவும். பிறகு வேக வைத்த பருப்பை மசித்துக் கொட்டி, ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய் பொடி 2 மேசைக்கரண்டி போட்டு கலக்கி விடவும்

11. ரசம் கொதித்து நுரைத்தவுடன் இறக்கி விடவும்.மேலே சிறிது தேங்காய்ப் பொடியினை தூவலாம். மைசூர் ரசம் தயார். தேங்காய், பருப்பு அதிகம் சேர்ப்பதுதான் மைசூர் ரசத்தின் சிறப்பு


*******************************************

5.தக்காளி மிளகு ரசம்



தேவையானவை:

*புளி - எலுமிச்சம் பழ அளவு
*தக்காளி - ஒரு கப் மசித்தது
*மிளகுத்தூள் - முக்கால் தேக்கரண்டி
*நெய் - 2 மேசைக்கரண்டி
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கை பிடி
*பூண்டு - 8 பல்(சிறியது)
*ரசப்பொடி - 2 தேக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
*மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
*தண்ணீர் - 6 கப்
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  புளியை போதுமான நீரில் ஊறவைத்து சாறெடுக்கவும். சாறு ஒரு கப் இருக்க வேண்டும்.

2.  இதில் தண்ணீர், தக்காளி, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

3 நிமிடம் கொதித்த பிறகு, இன்னொரு பக்கம் வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கவும்.

4.  கடுகு சேர்த்து அது வெடித்ததும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மிகக்குறைந்த தீயில் சிறிது வதக்கவும்.

5.  பிறகு தூள்களைச் சேர்த்து மீதமுள்ள கால் தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து, ஒரு தடவை பிரட்டி ரசத்தில் கொட்டி, போதிய உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.

6. தக்காளி மிளகு ரசம் தயார்.


********************************************


6.பைனாப்பிள் ரசம்

தேவையானவை:

*துவரம்பருப்பு - 100 கிராம்
*புளி - 10 கிராம்
*அன்னாசி - 4 துண்டுகள்
*உலர்ந்த மிளகாய் - 6
*தனியா - 5 கிராம்
*கொத்தமல்லி - சிறிது
*கறிவேப்பிலை - சிறிது
*கடுகு - அரைத்தேக்கரண்டி
*எண்ணெய் - 10 கிராம்
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தனியா இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.

2.  ஒரு பாத்திரத்தில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சூடானதும் பருப்பைப்போடுங்கள்.

3.  பருப்பு நன்றாக வெந்ததும் புளி, உப்புப் பொடி, மிளகாய்ப்பொடியையும் போட்டுக் கலந்து விடுங்கள்.

4.  எல்லாம் நன்றாக கொதித்ததும் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக்கிப் போடுங்கள்.

5.  மேலும் நன்றாகக் கொதித்ததும் மேலும் இருநூறு மில்லி தண்ணீர் விட்டுச் சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்குங்கள்.

6. கடுகைத் தாளித்துக் கொட்டுங்கள். கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் போட்டு உபயோகியுங்கள்.

*********************************************

7.பூண்டு ரசம்

தேவையானவை:

*துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
*புளி - நெல்லிக்காய் அளவு
*பூண்டு - 10 பல்
*தக்காளி - 3
*மிளகாய் - 2
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*மிளகுத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
*சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
*வெந்தயம் - கால் தேக்கரண்டி
*பெருங்காயம் - கால் தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  புளியை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடித்து எடுத்துக் கொள்ளவும்.

2.  துவரம் பருப்புடன் மஞ்சள் தூளினைச் சேர்த்து, போதுமான அளவு நீர் விட்டு, நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். மிளகாயைக் கிள்ளிப் போடவும்.

4.  அத்துடன் பொடியாக நறுக்கின பூண்டினை சேர்த்து வதக்கவும். பூண்டினை நறுக்கியோ அல்லது நசுக்கியோப் போடலாம்.

5. பூண்டு சற்று வதங்கியவுடன் பொடியாய் நறுக்கின தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பிறகு புளிக்கரைசலை ஊற்றி வேக விடவும்.

6. கரைசலுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, வேக வைத்து மசித்த பருப்பு அனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும்.

7.  கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும். ரசம் கொதித்து நுரைக்க ஆரம்பித்தவுடன் இறக்கி விடவும்.

*****************************************
8.எலுமிச்சம் பழ ரசம்



எலுமிச்சம் பழ ரசம்
தேவையானவை:

*துவரம் பருப்பு - கால் ஆழாக்கு
*உப்பு - ஒரு தேக்கரண்டி
*ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
*தக்காளி - ஒன்று
*சிறிய எலுமிச்சம் பழம் - ஒன்று
*கடுகு - கால் தேக்கரண்டி
*பெருங்காயம் - ஒரு துண்டு
*தனியா - கால் தேக்கரண்டி
*மிளகு - கால் தேக்கரண்டி
*சீரகம் - கால் தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பருப்பை போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

2. தண்ணீரில் தக்காளிப்பழத்தை பிசைந்து அதில் ரசப்பொடி, உப்பு, பெருங்காயம் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

3.  அதனுடன் வேகவைத்த பருப்பையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கிவிடவும்.

4.  வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் தனியா, மிளகு இவற்றை இரண்டு நிமிடங்கள் வறுத்து சீரகத்தோடு வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து ரசத்தில் தூவவும். சீரகத்தை வறுக்க வேண்டாம்.

5.  வாணலியில் எண்ணேய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் கொட்டவும்
.
******************************************

9.வேப்பம்பூ ரசம்

தேவையானவை:

*புளி -- எலுமிச்சம் பழம் அளவு [கரைத்த தண்ணீர்]
*மிளகு -- 1/2 டீஸ்பூன்
*சீரகம் -- 1/2 டீஸ்பூன்
*கரிவேப்பிலை -- 2 இனுக்கு
*பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன்
*எண்ணைய் -- 1 ஸ்பூன்
*கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
*மிளகாய் வத்தல் -- 3 என்னம்
*வெந்தயப் பொடி -- 1/2 டீஸ்பூன்
*உப்பு -- ருசிக்கேற்ப
*தக்காளி -- 2 என்னம்[(நன்றாக பிசைந்து கரைத்தத])]கொத்தமல்லி தழை -- 1 *டேபிள்ஸ்பூன் [பொடியாக நறுக்கியது)
*வேப்பம்பூ -- 1 ஸ்பூன் [வெறும் வாணலியில் 1 நிமிடம் வறுத்தது]

செய்முறை:

1.  வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு, வத்தல்,   கறிவேப்பிலை தாளித்து அதில் வெந்தய்ப் பொடி, பெருங்காயம் போட்டு புளித்தண்ணீரை ஊற்றவும்.

2.  அதனுடன், உப்பு, கரைத்த தக்காளி இவற்றை போட்டு நுரை ததும்பி வறும் போது அடுப்பை நிறுத்தவும்.

3.  நிறுத்தும் முன் கொத்தமல்லி, வேப்பம் பூவை சேர்த்து இறக்கவும்.
சுவையான வேப்பம்பூ ரசம் ரெடி.

4.  சித்திரை மாதம் வருடப்பிறப்பு அன்று முக்கியமாக செய்யும் ரசம் இது

************************************

Friday, April 23, 2010

சாம்பார் வகைகள்/குழம்பு வகைகள்

தமிழகத்தின் சாம்பார் தனிருசிதான். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இது ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகின்றது. அடிப்படை மூலப் பொருட்கள் பருப்பு, புளிக்கரைசல், காய்கறிகள் என்றாலும், தயாரிக்கப்படும் விதம் ஊருக்கு ஊர் வேறுபடுகின்றது.
சிற்றுண்டி வகைகளுக்காக, பெரும்பாலும் இட்லிக்காக தயாரிக்கப்படும் இட்லி சாம்பாரின் ருசி அலாதியானது. துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பயற்றம்பருப்பு என அனைத்து வகை பருப்புகளைப் பயன்படுத்தியும் சாம்பார் தயாரிக்கப்படுகின்றது. அரைத்துவிட்ட வெங்காய சாம்பார் மிகவும் சிறப்பானது.


 பாசிப்பயறு சாம்பார்[Moong Dal Sambar]

தேவையான பொருட்கள்:

*பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 1/2 கப்
*பச்சைமிளகாய் - 3
*தக்காளி - 2
*கெட்டியான புளிக்கரைச்சல் - 2 டேபிள் ஸ்பூன்
*மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
*சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
*உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

1. பருப்பை குக்கரில் போட்டு ஒரு விசில் சத்தம் வரைக்கும் வேக வக்கவும்.
2. தக்காளியைப் பொடியாக நறுக்கவும். சிறுய வெங்காயத்தை உரிக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
3. பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி இவற்றை எண்ணெயில் வதக்கவும்.
4. வேகவைத்த பருப்பு, உப்பு, சாம்பார் பொடி, புளிக்கரைச்சல் சேர்க்கவும். போதுமான தண்ணீர் விடவும்.
5. கெட்டியாக கொதிக்க வைக்கவும். சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு , கடலைப்பருப்பு இவற்றை தாளிக்கவும்.
6. சாம்பாரில் ஊற்றி கறிவேப்பிலை போட்டு அலங்கரிக்கவும்.

 
 தக்காளி சாம்பார்[Tomato Sambar]

தேவையான பொருட்கள்:

*வேகவைத்த துவரம்பருப்பு - 1/2கப்
*மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
*உப்பு - தேவைக்கேற்ப
*கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்
*தக்காளி - 2 அரிந்து கொள்ளவும்

எண்ணெயில் வதக்கி:அரைக்கவும்:

*சீரகம் - 1 டீஸ்பூன்
*பச்சைமிளகாய் - 7
*பொடியாக நறுக்கிய தக்காளி - 1/4 கப்
*தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
[அரைக்கும் போது தேங்காய் சேர்க்கவும்]

செய்முறை:

1. பருப்பை நன்றாகக் கடைந்து கொள்ளவும்.
2. தேவையான தண்ணீர் விட்டு, மற்ற பொருட்களையும் அரைத்த விழுதையும் சேர்த்து சேர்க்கவும்.
3. பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.
4. கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கடிக்கவும்.

**************************************

  கத்திரிக்காய் அரைத்துவிட்ட சாமபார்


கத்திரிக்காய் அரைத்துவிட்ட சாமபார்


தேவையானப்பொருட்கள்:

*துவரம் பருப்பு - 1/2 கப்
*கத்திரிக்காய் -  சிறிதளவு
*சாம்பார் வெங்காயம் - 5 முதல் 6 வரை[விருப்பப்பட்டால்]
*தக்காளி - 1
*புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

*காய்ந்த மிளகாய் - 6 முதல் 8 வரை
*தனியா - 1 டேபிள்ஸ்பூன்
*கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
*மிளகு - 1/4 டீஸ்பூன்
*சீரகம் - 1/4 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
*எண்ணை - 2 டீஸ்பூன்

தாளிக்க:

*எண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1. துவரம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

2. கத்திரிக்காய் அல்லது விருப்பமான காயை 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை தோலுரித்து விட்டு நீள வாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. புளியை ஊற வைத்து, கரைத்துப் பிழிந்துக் கொள்ளவும். புளித்தண்ணீர் 2 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

4. ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வறுக்கக் கொடுத்துள்ளப் பொருட்களைப் போட்டு சற்று சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அரைத்தப்பின் மிக்ஸியைக் கழுவி அந்த நீரையும், அரைத்த விழுதில் சேர்த்துக் கொள்ளவும்.

5. வாணலி அல்லது அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் 1 டீஸ்பூன் எண்ணை விட்டு சாம்பார் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் தக்காளித்துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. தக்காளி நன்றாக வதங்கியவுடன் அத்துடன் கத்திரிக்காய் அல்லது நறுக்கி வைத்துள்ள வேறு காயைப் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றையும் போட்டு காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து, காய் வேகும் வரை கொதிக்க விடவும்.

7. காய் வெந்ததும் புளித்தண்ணீரைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள விழுது, வேக வைத்துள்ள பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

8. பின்னர் அதில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

9.  சுவைமிக்க அரைத்துவிட்ட சாம்பார் தயார்.

**************************************
  இரு புளிக்குழம்பு

இரண்டு வகை புளிப்பு [புளி, மற்றும் தயிர்] சேர்த்து செய்யப்படுவதால், இதை இரு புளிக்குழம்பு என்று அழைப்பார்கள். வத்தக்குழம்பு, மோர்குழம்பு இரண்டும் கலந்த சுவையில் இருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

*புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
*தயிர் - 1 கப்
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
*மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
*வெண்டைக்காய் - 4 அல்லது 5

வறுத்தரைக்க:

*காய்ந்த மிளகாய் - 5 முதல் 6 வரை
*உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
*வெந்தயம் - 1 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 1/2 அல்லது 3/4 கப்

தாளிக்க:

*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  புளியை ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2.  ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து சற்று வதக்கி, ஆற விட்டு, பின்னர் சிறிது நீரைச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

3.  வெண்டைக்காயை இரண்டு அங்குல நீளத்திற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு, அதில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

4.  ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் வதக்கிய வெண்டைக்காய், உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை, ஒன்று அல்லது ஒன்றரைக் கப் நீரில் கரைத்து குழம்பில் ஊற்றிக் கிளறி விடவும். குழம்பு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரைக் கட்டியில்லாமல் நன்றாகக் கடைந்து ஊற்றவும். [கெட்டியான மோர் இருந்தாலும் சேர்க்கலாம்]. அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பு மீண்டும் ஒரு முறை கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வைத்து, தாளித்துக் கொட்டவும்.

5.  கவனிக்க: இந்தக் குழம்பிற்கு எந்த எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் தேங்காய் எண்ணையை உபயோகப்படுத்தினால், சுவை வித்தியாசமாக இருக்கும்.

குறிப்பு:

இந்தக் குழம்பில் விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம். ஆனால், கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளைப்பூசணிக்காய், சௌசௌ, வாழைத்தண்டு ஆகியவை பொருத்தமாயிருக்கும். வெண்டைக்காயை சேர்ப்பதானால், மேற்கூறியபடி, ஒரு டீஸ்பூன் எண்ணையில் வதக்கி சேர்க்கவும். கத்திரிக்காயென்றால், துண்டுகளாக்கி அப்படியே புளித்தண்ணீரில் சேர்க்கலாம். மற்ற காய்கள் என்றால், ஆவியில் வேக விட்டு பின்னர் சேர்க்கவும்.


*****************************************
  கீரை சாம்பார்

தேவையானப்பொருட்கள்:




*கீரை [எந்த வகை கீரையானாலும்] பொடியாக நறுக்கியது - 1 கப்
*துவரம் பருப்பு - 1/2 கப்
*புளி - எலுமிச்சம் பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


தாளிப்பதற்கு:


*எண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
*சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5 (நீளவாக்கில் வெட்டியது)
*தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)


செய்முறை:


1.  துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீரும், மஞ்சள் தூளும் சேர்த்து குக்கரில் குழைய வேகவிட்டு எடுக்கவும்.


2.  புளியை தண்ணீரில் ஊற வைத்து, சாற்றை பிழிந்து எடுக்கவும். புளித்தண்ணீர் 2 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.


3.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், பெருங்காயம் போட்டு சற்று வறுத்து, அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின் அதில் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கியவுடன், வேக வைத்த பருப்பையும், உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், புளித்தண்ணீரில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி ஊற்றவும். மேலும் சில வினாடிகள் கொதித்தப்பின், அதில் கீரையைப் போட்டுக்கிளறிவிட்டு, மிதமான தீயில் மூடி வைத்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதித்த பின் இறக்கி வைக்கவும். 
4.  சுவைமிக்க கீரை சாம்பார் தயார்.

*******************************************
  பருப்பு உருண்டைக் குழம்பு
 
இந்த குழம்பு ஒரு "தஞ்சாவூர் ஸ்பெஷல்" item!!. எங்கள் வீட்டில் அனைவரும் இதனை மிக்க விரும்பி சாப்பிடக்கூடிய ஒர் "dish" இது.

தேவையானப் பொருட்கள்:

*துவரம் பருப்பு - 1/2 கப்
*பச்சை அரிசி - 1 டீஸ்பூன்
*புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
*சாம்பார் வெங்காயம் - 3
*பெரிய வெங்காயம் - பாதி
*தேங்காய் துருவல் - 1/4 கப்
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் (நிறைய)
*மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
*நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*கறிவெப்பிலை - ஒரு கொத்து
*உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  துவரம் பருப்பு, அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு சற்று கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து பிசைந்து, சிறு எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

2.  உப்பு, புளி இரண்டையும் ஊறவைத்து, தண்ணீர் சேர்த்து கரைத்து மூன்று கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

3.  அதில் சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தவுடன், அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொண்டு, இரண்டு அல்லது மூன்று பருப்பு உருண்டைகளை குழம்பில் போடவும். குழம்பு மீண்டும் கொதிக்கும் பொழுது மேலும் இரண்டு உருண்டைகளை போடவும். இப்படியே எல்லா உருண்டைகளையும் போட்டு முடித்தவுடன், ஒரு கரண்டியால், உருண்டைகளை லேசாக திருப்பி விடவும். குழம்பு மீண்டும் கொதித்ததும், தேங்காயை அரைத்து குழம்பில் விட்டு கொதிக்க விடவும்.

4.  கடுகு தாளித்து, அத்துடன் பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி குழம்பில் கொட்டவும்.
5. சுவையான  பருப்பு உருண்டைக் குழம்பு தயார்.

*******************************************

  வாழைக்காய் பால் குழம்பு

உடம்புக்கு நல்லது, மற்றும் மாதம் ஒரு முறை இந்த ருசியான குழம்பை சமைத்து சாப்பிடலாம்.

தேவையானப்பொருட்கள்:

*வாழைக்காய் - 1
*தேங்காய் - 1
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
*மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
*உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 2 அல்லது 3 (பொடியாக நறுக்கியது)
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  தேங்காயைத்துருவி கெட்டியான பாலை எடுக்கவும். பின்னர் சிறிது தண்ணீரை தேங்காயுடன் சேர்த்து அரைத்து, இரண்டாம் பாலையும் பிழிந்து எடுக்கவும்.

2.  கடையில் கிடைக்கும் தேங்காய்ப்பாலை உபயோகித்தால், மேற்கண்ட வேலை மிச்சம்.

3.  வாழைக்காயின் தோலை சீவி விட்டு, நீளவாக்கில் நான்காக வெட்டவும். பின்னர் அதை 3 அங்குலத் துண்டுகளாக வெட்டவும்.

4.  வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் இரண்டாம் பாலைச் சேர்க்கவும். காய்கள் மூழ்கும் அளவிற்கு பால் இருக்க வேண்டும். தேவை பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

5.  ரெடிமேட் தேங்காய் பால் உபயோகித்தால், 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் திக்கான பாலுடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து உபயோகிக்கவும்.

6.  காய் மூழ்கும் அளவிற்கு பாலும் தண்ணீரும் சேர்த்து, அத்துடன் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும். காய் நன்றாக வெந்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான பாலை ஊற்றவும். மீண்டும் குழம்பு ஒரு கொதி வந்ததும், இறக்கி வைத்து, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

7.  தாளிப்பதற்கு தேங்காய் எண்ணை உபயோகித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

8.  சூடான சாதம் மற்றும் தொட்டுக் கொள்ள, பொரித்த அப்பளம், வடவம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

**********************************************

 புளிச்சாறு

புளிச்சாறு அனைவரும் சுவைத்து, விரும்பி சாப்பிடக்கூடிய item  ஒன்றாகும்.

தேவையானப்பொருட்கள்:


*புளி - எலுமிச்சம் பழ அளவு
*பெரிய வெங்காயம் - 1
*காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது
*எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து சாற்றைப் பிழிந்தெடுக்கவும். தேவையான நீரைச் சேர்த்து, 3 கப் புளித்தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

2.  வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

3.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், தீயைத் தணித்துக் கொண்டு வெந்தயத்தைச் சேர்த்து சற்று சிவக்க வறுக்கவும். காய்நத மிளகாயை ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று மினுமினுப்பாக வதங்கியதும் புளித்தண்ணீரை விடவும். அத்துடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்து மிதமான தீயில் மேலும் 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

4.  சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள அப்பளம் பொருத்தமாயிருக்கும். பார்ப்பதற்கு ரசம் போலும், சுவையில் புளிக்காய்ச்சல் போலவும் இருக்கும்.

5.  காய்கறிகள் கையிருப்பில் இல்லாத பொழுது, அவசரத்திற்கு இந்தச் சாறு கை கொடுக்கும்.

6.  சுவைமிக்க புளி சாறு தயார்.

*********************************************

  பொரிச்ச குழம்பு

தேவையானப்பொருட்கள்:

*காய்கறி நறுக்கியது - 2 கப் [வெள்ளைக்கத்திரிக்காய், பெங்களூர் கத்திரிக்காய், அவரைக்காய், குடமிளகாய் அல்லது விருப்பமான எந்தக் காயையும் சேர்க்கலாம்]
*பயத்தம் பருப்பு - 1/2 கப்
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
*மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைத்தெடுக்க:

*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*பச்சை மிளகாய் - 1
அரிசி மாவு - 1 டீஸ்பூன்

தாளிக்க:

*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 2 [பொடியாக நறுக்கிக் கொள்ளவும்]
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும். குழைய விடவேண்டாம்.

2.  காய்கறித்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு த்ண்ணீரை சேர்த்து வேக விடவும். காய் வெந்தவுடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து கொதிக்க விடவும்.

3.  தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு ஆகியவற்றை அரைத்தெடுத்து, அத்துடன் அரைத்த மிக்ஸியைக் கழுவி அந்த நீரையும் சேர்த்து, கொதிக்கும் குழம்பில் விட்டுக் கிளறவும். மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து பின்னர் அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

4.  சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள பொரித்த அப்பளம் அல்லது வடவம் நன்றாக இருக்கும்.

****************************************

  அகத்திக் கீரை சாறு

அகத்திக் கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சமயலில் சேர்த்துக் கொண்டால், உடம்பு ஆரோகியமாக இருக்கும்

தேவையானப்பொருட்கள்:

*அகத்திக்கீரை - 1 கட்டு
*பெரிய வெங்காயம் - 1
*பச்சை மிளகாய் - 2
*சீரகம் - 1 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1.  கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும்.

2.  வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சற்று வதக்கவும். அத்துடன் கீரையை அலசிப் போட்டு, சீரகம், உப்பு சேர்க்கவும். அதில் ஒரு கப் தண்ணீரையும் சேர்த்து மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும்.

4.  தேங்காயை நன்றாக அரைத்து வெந்தக் கீரையில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

5.  சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்ற வல்லது. இந்தச் சாற்றை வடிகட்டி சூப் போலவும் குடிக்கலாம்.

********************************************

 மிளகு குழம்பு

தேவையானப்பொருட்கள்:

*மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
*சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
*முழுப்பூண்டு - 1
*புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
*நல்லெண்ணை - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது
*சாம்பார் வெங்காயம் - 5 அல்லது 6
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  புளியை ஊறவைத்து, கரைத்து ஒரு கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

2.  வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து, பூண்டுப்பற்களை தனியாக எடுத்து வைக்கவும். பத்து முதல் பதினைந்து பூண்டுப்பற்கள் போதுமானது.

3.  ஒரு வாணலியில், ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, முதலில் மிளகையும், பின்னர் சீரகத்தையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, பூண்டைப் போட்டு, நன்றாக சிவக்கும் வரை வதக்கி எடுத்து, மிளகு, சீரகம் ஆகியவற்றுடன் சேர்த்து மை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

4.  அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மீதி எண்ணையை விடவும். அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெங்காயம், கறிவேப்பிலைப் போட்டு சிறிது வதக்கவும். அதில் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மிளகு விழுதைப் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் கலக்கி விடவும். மிண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்துப் பின்னர் இறக்கி வைக்கவும்.

5.  குறிப்பு: மிளகிற்கு, உடல் வெப்பத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. அதனால், குளிர் அல்லது மழைக்காலங்களின் பொழுது, இந்தக் குழம்பைச் செய்து, சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். சுட்ட அப்பளம் இதற்குப் பக்கத் துணை.

6.  இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும். தயிர் சாதத்திற்கும் மிக சுவையாக இருக்கும்.

*****************************************

  வத்தக் குழம்பு


தேவையானப்பொருட்கள்:

*புளி - எலுமிச்சம் பழ அளவு
*வத்தல் - (மணத்தக்காளி அல்லது சுண்டைக்காய் வத்தல்) - 1 டேபிள்ஸ்பூன்
*பூண்டுப் பல் - 10 [ விருப்பப்பட்டால்]
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் [குவித்து அளக்கவும்]
*மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
*நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  உப்பு, புளி இரண்டையும் ஊறவைத்து, நன்றாகப் பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைச் சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும். இப்படி எடுத்த சாறு, மூன்று கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

2.  ஒரு வாணலியில் எண்ணையை விட்டு, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெந்தயத்தைச் சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொள்ளவும். இல்லையெனில், வெந்தயம் காந்தி கறுப்பாகிக் கசக்கும்). வெந்தயம் இலேசாக சிவந்தவுடன், வத்தலையும், பூண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் கறிவேப்பிலையையும் போட்டு சிறிது வதக்கி, அதில் புளித்தண்ணீரை ஊற்றவும். அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி விடவும். ஒரு மூடி போட்டு மூடி வைத்து, மிதமான தீயில் நன்றாகக் கொதித்து, எண்ணை மேலே தெரியும் வரை வைத்திருந்து, பின்னர் கீழே இறக்கி வைக்கவும்.

3.  குறிப்பு: மேற்கண்ட முறையில் வைக்கப்படும் குழம்பு, சற்று சிவப்பாக இருக்கும். கருஞ்சிவப்பாக குழம்பு தேவையென்றால், புளித்தண்ணீரை ஊற்றும் முன்னர், பூண்டு, வத்தல் ஆகியவற்றை வதக்கிய பின்னர் அதில் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றைப் போட்டு எண்ணையில் நன்றாக வதக்கி, அதன் பின் புளித்தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விட்டால், குழம்பு கருஞ்சிவப்பாக இருக்கும்.

4.  இதில் "கருவடாம்" என்னும் தாளிக்கும் வடகத்தை கடுகுடன் சேர்த்து தாளித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

5.  தயிர் சாதத்திற்கும் மிக சுவையாக இருக்கும்.

**********************************************

 மாங்காய், முருங்கைக்காய், பலாகொட்டை சாம்பார்

இந்த சாம்பார் எங்கள் வீட்டின் அனைவருக்கும் பிடித்தமான ஓர் "டிஸ்" . என்னுடைய அம்மாவின் "தஞ்சாவூர் ஸ்பெஸல்" item...!!

மாங்காய், முருங்கைக்காய், பலாகொட்டை சாம்பார் தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தமான ஒன்று.  கோடைகாலத்தில், இந்த மூன்று காய்களும் தாராளமாக கிடைப்பதால், அனேகமாக எல்லோர் வீட்டிலும் வாரம் ஒரு முறையாவது இந்த சாம்பார் கண்டிப்பாக இருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

*மாங்காய் - 1 (நடுத்தர அளவு)
*முருங்கைக்காய் - 1
*பலாக்கொட்டை - 5 முதல் 6 வரை
*தக்காளி - 1
*துவரம் பருப்பு - 1 கப்
*புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிப்பதற்கு:

*எண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
*கறிவேப்பிலை - சிறிது
*சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5 [நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்]
*பச்சை மிளகாய் - 2 [நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்]

செய்முறை:

1.  துவரம் பருப்பை கழுவி, 2 கப் தண்ணீர் சேர்த்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூளைப்போட்டு, குக்கரில் வைத்து குழைய வேக விட்டு எடுக்கவும்.

2.  புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.

3.  தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

4.  பலாகொட்டையை குறுக்கே இரண்டாக வெட்டி, அதன் மேலுள்ள வெள்ளைத் தோலை நீக்கி, 2 கப் நீரில் போட்டு வேக விட்டு, தனியாக எடுத்து வைக்கவும்.

5.  முருங்கைக்காயை 2 அல்லது 3 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். மாங்காயை கொட்டையுடன் நான்கு அல்லது 5 துண்டுகளாக விட்டிக் கொள்ளவும்.

6.  ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய் துண்டுகள், வேக வைத்த பலாகொட்டை, தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து 5 அல்லது 6 நிமிடங்கள் வேக விடவும். பின்னை அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்து மாங்காய் வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். மாங்காய் சீக்கிரம் வெந்துவிடுமாகையால், முருங்கைக்காய் சற்று வெந்ததும்தான் மாங்காயைச் சேர்க்க வேண்டும். மாங்காயை முதலிலேயே சேர்த்தால், மாங்காய் வெந்து கரைந்து விடும்.

7.  காய்கள் வெந்தவுடன், புளித்தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் வெந்தப் பருப்பை கடைந்து சேர்க்கவும்.

8.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு, அது வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், வெட்டி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, கொதிக்கும் சாம்பாரில் கொட்டி, இறக்கி வைக்கவும்.

9.  மாங்காய், முருங்கைக்காய், பலாகொட்டை சாம்பார் தயார்.

*********************************************


 இட்லி சாம்பார்

இட்லிக்கு எந்த விதமான சாம்பாரையும் தொட்டுக்கொள்ளலாம். ஆனாலும், அதிக புளிப்பு, காரம் இல்லாமல் செய்யப்படும் இந்த சாம்பார், இட்லிக்கு கூடுதல் சுவைச் சேர்க்கும்.

தேவையானப்பொருட்கள்:

*துவரம்பருப்பு - 1/2 கப்
*பயத்தம்பருப்பு - 1/4 கப்
*புளி - நெல்லிக்காயளவு
*சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
*மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
*தக்காளி - 1
*பச்சைமிளகாய் - 2
*கறிவேப்பிலை - சிறிது
*கொத்துமல்லித்தழை - சிறிது
*எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாகப் போட்டு, அத்துடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

2.  புளியை ஊறவைத்து, கரைத்து 1/2 கப் வரும் அளவிற்கு, புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3.  சாம்பார் வெங்காயத்தை, தோலுரித்து, நீளவாக்கில் ஒன்றிரண்டாக நறுக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். தக்காளியையும் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

4.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூள், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வாசனை வரும் வரை வதங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் அதில் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு போட்டு அத்துடன் புளித்தண்ணீரைச் சேர்த்து கலந்து, மூடி கொதிக்க விடவும். ஓரிரு நிமிடங்கள் நன்றாகக்கொதித்தவுடன், வெந்தப்பருப்பைச் சேர்த்து கிளறி விடவும். மீண்டும் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, கீழே இறக்கி வைத்து கொத்துமல்லித் தழையைத்தூவவும்.

5.  குறிப்பு: எண்ணையில் வறுத்து அரைத்த சாம்பார் பொடியை உபயோகித்தால், சாம்பார் வாசனையாக இருக்கும்.

6.  இதில், ஒரு உருளைக்கிழங்கு, ஒரு காரட் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, வெங்காயம் வதக்கும் பொழுது அத்துடன் சேர்த்து வதக்கி சேர்க்கலாம். அல்லது விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம்.

*******************************************


  கறிவேப்பிலை குழம்பு

நல்ல காரசாரமான இந்தக்குழம்பு குளிர் காலத்துக்கு ஏற்றது.

தேவையானப்பொருட்கள்:

*கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
*துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
*கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
*காய்ந்த மிளகாய் - 5
*மிளகு - 2 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*புளி - எலுமிச்சம் பழ அளவு
*மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
*எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  உப்பு, புளி இரண்டையும் ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

2.  ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் கறிவேப்பிலையைப் போட்டு சிறிது வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் வறுத்து வைத்துள்ள பருப்புகள், மிளகாய், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

3.  தேங்காய்த்துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

4.  வாணலியில் மீதமுள்ள எண்ணையை விட்டு, சூடானதும் அதில் கடுகு போட்டு, வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம், வெந்தயம் போட்டு, வெந்தயம் சற்று சிவந்ததும் (கருக விடக்கூடாது) அதில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும். மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கிளறி சிறு தீயில் மீண்டும் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

5.  விருப்பமானால் ஓரிரண்டு பூண்டுப்பற்கள், மற்றும் சாம்பார் வெங்காயத்தையும் தாளிப்பில் சேர்க்கலாம்.

*****************************************


  சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு

தேவையானப்பொருட்கள்:


*சுண்டைக்காய் - 2 கப்
*துவரம் பருப்பு - 1/2 கப்
*சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*காய்ந்த மிளகாய் - 2
*கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
*தனியா - 1 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

*எண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
*வெங்காயம் நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  சுண்டைக்காயின் காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

2.  துவரம்பருப்பை, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

3.  ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், தனியா ஆகியவற்றை வறுத்து, ஆறியபின், அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

4.  சுண்டைக்காயைத் தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு அத்துடன் காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் வேகவிடவும்.

5.  காய் வெந்த பிறகு, வேக வைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறி, ஒரு கொதி வரும்வரை மிதமான தீயில் வைக்கவும். பின்னர், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலக்கி விட்டு ஓரிரு வினாடிகள் கொதிக்க விடவும்.

6.  கடைசியில், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.

 குறிப்பு: துவரம் பருப்பிற்குப் பதில், பயத்தம்பருப்பையும் இதில் சேர்த்து செய்யலாம்.  சுவையாக இருக்கும்.

*****************************************

 வெங்காய சாம்பார்[Onion Sambar]



வெங்காய சாம்பார்


தேவையான பொருட்கள்:


*சாம்பார் வெங்காயம் - 15 அல்லது 20
*தக்காளி நடுத்தர அளவு - 1
*பச்சை மிளகாய் - 2
*துவரம் பருப்பு - 1 கப்
*புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
*மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

*எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
*க‌டுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காய‌த்தூள் -‍ ஒரு சிட்டிகை
*க‌றிவேப்பிலை - சிறிது
*கொத்த‌ம‌ல்லித்த‌ழை - சிறிது

செய்முறை:

1.  துவரம்பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள்த்தூள் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும்.

2.  புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 2 கப் அளவிற்கு புளித்தண்ணீர் இருக்கவேண்டும்.

3.  வெங்காயத்தை தோலுரித்து, முழுதாக வைத்துக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில், இரண்டாக நறுக்கி வைக்கவும்.

4.  ஒரு வாண‌லியில் எண்ணை விட்டு (ந‌ல்லெண்ணை உப‌யோகித்தால், வாச‌னையாக‌ இருக்கும்) சூடான‌தும் க‌டுகு போட‌வும். க‌டுகு வெடித்த‌வுட‌ன், பெருங்காய‌த்தூள், வெங்காய‌ம், ப‌ச்சை மிள‌காய், க‌றிவேப்பிலைச் சேர்த்து வ‌த‌க்க‌வும். வெங்காய‌ம் ச‌ற்று வ‌த‌ங்கிய‌வுட‌ன், த‌க்காளித்துண்டுக‌ளைச் சேர்த்து ஒரு நிமிடம் வ‌த‌க்க‌வும். பின்ன‌ர் அதில், புளித்த‌ண்ணீர், சாம்பார் பொடி, ம‌ஞ்ச‌ள்த்தூள், உப்புச் சேர்த்து, மூடி வைத்து, மித‌மான‌ தீயில் கொதிக்க‌ விட‌வும்.

5.  குழ‌ம்பு கொதிக்க‌ ஆர‌ம்பித்த‌தும், வெந்த‌ப் ப‌ருப்பை ம‌சித்து சேர்க்க‌வும். ந‌ன்றாக‌க் கிள‌றி மீண்டும் கொதிக்க‌ விட‌வும். சாம்பார் கொதித்து, ச‌ற்று கெட்டியான‌தும், கீழே இற‌க்கி, கொத்தும‌ல்லித் த‌ழையைத் தூவ‌வும்.

6.  சுவைமிக்க வெங்காய சாம்பார் தயார்.


*******************************************
 
  மோர்க்குழம்பு
 
தேவையானப் பொருட்கள்:

*மோர் - 2 கப் (திக்காக இருக்கவேண்டும்)
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*பச்சைமிளகாய் - 2
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*அரிசி - 1/2 டீஸ்பூன்
*துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
*தனியா - 1 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*காய்ந்த மிளகாய் - 1
*பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
*கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
*உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

1.  துவரம் பருப்பு, தனியா, சீரகம், அரிசி அகியவற்றை 10 அல்லது 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

2.  பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளவும்.

3.  மோரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், உடனே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

4.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் கொட்டவும்.

குறிப்பு:

தயிராக இருந்தால், ஒரு பாத்திரத்தில் கொட்டி மோர் சிலுப்பியால் நன்றாக சிலுப்பிக் கொள்ளவும். குழம்பை நீண்ட நேரம் கொதிக்க விடக்கூடாது. அப்படிக் கொதித்தால், குழம்பு நீர்த்துப் போய் விடும். குழம்பில் காய் சேர்த்தும் செய்யலாம். வெண்டைக்காய், பெங்களூர் கத்திரிக்காய், வெள்ளைப் பூசணிக்காய் பொருத்தமாய் இருக்கும். வெண்டைக்காய் சேர்ப்பதென்றால், காம்பு நீக்கி விட்டு, இரண்டு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணையில், பிசுக்கு போக வதக்கி, குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். மற்ற காய்கள் என்றால், காயை சிறிது வேகவைத்து சேர்க்கவும். நாலைந்து மசால் வடைகளை குழம்பில் சேர்த்தால், வடை ஊறி, அருமையான வடை மோர்க்குழம்பு தயார்.

*****************************************

  முருங்கைக்காய் பொரிச்சக் குழம்பு

தேவையானப் பொருட்கள்:

*முருங்கைக்காய் - 2
*பயத்தம்பருப்பு - 1/2 கப்
*தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*அரிசி - 1/2 டீஸ்பூன்
*பச்சை மிளகாய் - 1
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 4
*கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

1.  முருங்கைக்காயை மூன்று அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2.  பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேகவைத்துக் கொள்ளவும். குழைய விட வேண்டாம்.

3.  ஒரு பாத்திரத்தில், முருங்கைக்காய் துண்டுகளைப் போட்டு, காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றவும். அதில், சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

4.  தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், அரிசி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

5.  காய் வெந்தவுடன், வேக வைத்த பயத்தம் பருப்பை லேசாக மசித்து சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சிறிது தண்ணீருடன் கலக்கி குழம்பில் ஊற்றவும். நன்றாகக் கிளறி விட்டு மீண்டும் கொதிக்க விடவும்.

6. குழம்பு நன்றாகக் கொதித்தவுடன், கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை தாளித்துக் கொட்டவும்.

Thursday, March 4, 2010

துவையல்/சட்டினி வகைகள்

துவையலும் சட்னியைப் போன்று மிகவும் சுவையானதொரு பக்க உணவு. இரண்டிற்கும் செய்முறையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. சட்னியை தாளிப்பார்கள். துவையலை பெரும்பாலும் தாளிப்பதில்லை. சட்னி சற்று நீர்க்க இருக்கும். நல்ல திரவமாய் செய்பவர்களும் உண்டு. துவையல் அப்படியல்ல. விழுதாய் இருக்கும்.

சிற்றுண்டி வகைகளுக்கு மட்டுமல்லாமல், சாதங்களுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் துவையல் வகைகள் மிகவும் சிறந்தது.அதிகம் வேக வைப்பது இல்லை என்பதால், அதில் உள்ள சத்துக்களும் விரயம் ஆகாமல் முழுமையாகக் கிட்டுகின்றன.
 
 புதினா துவையல்[Pudina Thuvayal]

தேவையானப் பொருட்கள்
*புதினா - 1 கட்டு
*தேங்காய் - 1/2 மூடி
*மிளகாய் வற்றல் - 12
*புளி - சிறு நெல்லிக்காய் அளவு
*உப்பு - 1 தேக்கரண்டி
*உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
*பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
*கறிவேப்பிலை - 1 கொத்து
*கடுகு - 1/2 தேக்கரண்டி
*எண்ணெய் - 1 1/2 மேஜைக்கரண்டி

செய்முறை

1.  புதினா இலைகளை ஆய்ந்து கொண்டு தண்ணீரில் அலசிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி எடுத்துக் கொள்ளவும்.
2.  வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு போட்டு 30 நொடி சிவக்க வறுக்கவும்.
3.  பருப்பு சிவந்ததும் கிள்ளி வைத்திருக்கும் மிளகாய் வற்றல் மற்றும் புளி போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.
4.  ஒரு நிமிடம் கழித்து அலசி வைத்திருக்கும் புதினாவை போட்டு 2 நிமிடம் வதக்கவும். புதினா இலை லேசாக நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து எடுத்து ஆற விடவும்.
5.  வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
6.  பிறகு மிக்ஸியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். அதன் பின்னர் அரைத்த துவையலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் தாளித்த பொருட்களை கொட்டி கலந்துக் கொள்ளவும்.
7.  இந்த துவையலை சாதத்துடன் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி மற்றும் தோசைக்கு கூட சேர்த்து சாப்பிடலாம்.

********************************************

கத்தரிக்காய் துவையல்[Brinjal Thuvayal] 



தேவையான பொருட்கள்

*கத்தரிக்காய் 4
*உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டி
*காய்ந்த மிளகாய் 6
*உப்பு தேவையான அளவு
*பெருங்காயம் சிறிதளவு
*புளி - சுண்டைக்காய் அளவு
*எண்ணெய் - 8 டீஸ்பூன்

செய்முறை

1.  கத்தரிக்காயை நறுக்கிக் கொண்டு 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.
2.  பிறகு 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுத்து பெருங்காயத்தை நன்கு பொரித்துக் கொண்டு, அடுப்பை அணைத்துவிட்டு, அந்த வாணலியின் சூட்டிலேயே காய்ந்த மிளகாயைப் போட்டு வறுக்கவும்.
3.  சூடு ஆறிய பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சுண்டைக்காய் அளவு புளி மற்றும் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். நீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
4.  இதை சாதத்திற்குப் பிசைந்து சாப்பிடவும், தயிர் சாதம், மற்றும் தோசை இட்லி என அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள மிக அருமையாக இருக்கும்

[  கிடைக்கும் அளவு: 2 பேருக்கு பரிமாறலாம்
    சமைக்கும் நேரம்: 10 min.
    கலோரி அளவு: 150gms கத்தரிக்காய்  = 103 கலோரி]

*****************************************************

 சௌசௌ துவையல்[Chowchow Thuvayal]



தேவையான பொருட்கள்

சௌசௌ - 2,
பச்சை மிளகாய் - 3
தேங்காய் - 2 மேஜைக்கரண்டி,
புளி - 1 நெல்லிக்காய் அளவு,
கடலைப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - 1 1/2 மேஜைக்கரண்டி.

செய்முறை


1.  சௌசௌவை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.  வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பை போட்டு சிவந்தவுடன் பச்சை மிளகாய், சௌசௌ சேர்த்து வதக்கவும்.
3.  சௌசௌ வதங்கியவுடன் புளி, தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4.  எல்லாம் நன்கு வதங்கியபின் இறக்கி ஆற வைக்கவும்.
5.  ஆறியபின் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

குறிப்பு:

சாதம், இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.
 
[கிடைக்கும் அளவு: 4 பேருக்கு பரிமாறலாம்

சமைக்கும் நேரம்: 10 min.
கலோரி அளவு: 1 மேஜைக்கரண்டி = 10 கெலோரி]


*****************************************************

இஞ்சி சட்டினி[Ginger Chutney]


தேவையான பொருட்கள்

*சிகப்பு மிளகாய் - 5
*உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
*பொடியாக அரிந்த இஞ்சி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
*தேங்காய்த் துருவல் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
*வெல்லம் - சிறிது
*புளி - சிறு அலுமிச்சையளவு
*உப்பு - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

வாணலியில் சிறிது எண்ணைய் விட்டுச் சுடாக்கி மிளகாய், உளுத்தம்பருப்பு, இஞ்சி சேர்த்து வதக்கவும். தேங்காய், வெல்லம், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். சூடான எண்ணையில் கடுகு தாளித்து சட்டினியோடு கலக்கவும்.

[கிடைக்கும் அளவு:  2 பேருக்கு பரிமாறலாம்
கலோரி அளவு: 1டேபிள் ஸ்பூன் = 20 கலோரி ]

************************************************

தக்காளி வெங்காய சட்டினி[Tomato-Onion Chutney]

தேவையான பொருட்கள்

*சின்ன வெங்காயங்கள்- ஒரு கை
*தக்காளி[பொடியாக அரிந்தது]- 2 கப்
*உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
*கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்
*வற்றல் மிளகாய்-7
*புளி- ஒரு நெல்லிக்காயளவு
*கொத்தமல்லி இலை-அரை கப்
*தேங்காய்த்துருவல்- கால் கப்
*பூண்டிதழ்கள்-5
*தேவையான உப்பு
*தேவையான நல்லெண்ணெய்

செய்முறை

1.  புளியை சிறிது நீரில் ஊறவைக்கவும்.
2.  4 ஸ்பூன் எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி சுடவைக்கவும்.
3.  முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வற்றல் மிலகாய் இவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
4.  அதே எண்ணெயில் வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றை குழைவாக வதக்கவும். அனனத்துப்பொருள்களுடனும் தேங்காய், கொத்தமல்லி, உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்

[கிடைக்கும் அளவு: 4 பேருக்கு பரிமாறலாம்

  கலோரி அளவு: 92gms = 68 கலோரி ] 

********************************************************
தேங்காய் சட்டினி[Coconut Chutney]

தேவையான பொருட்கள்

*தேங்காய் துருவல் - 1/4 கப்
*பொட்டுக்கடலை - 1 1/2 டேபிள்ஸ்பூன்
*பச்சை மிளகாய் - 5
*புளி - நெல்லிக்காயளவு
*கல் உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

 எல்லாப் பொருட்களையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணைய் விட்டுச் சூடாக்கி, கடுகு சேர்த்து தாளிக்கவும். சட்டினியின் மேல் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

மாற்றுச் செய்முறை:


1. கொத்தமல்லிச் சட்டினி: மேலே சொன்ன பொருட்களோடு, ஒரு சிறிய கட்டு கொத்தமல்லியும், ஒரு துண்டு இஞ்சியும் சேர்க்கவும்.

2. சிவப்பு தேங்காய் ச்ட்டினி: அரைக்கும் போது, பச்சை மிளகாய்க்கு பதில், காய்ந்த மிளகாய் உபயோகிக்கவும். விருப்பப்பட்டால், ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து அரைக்கலாம்.

 [கிடைக்கும் அளவு: 2 பேருக்கு பரிமாறலாம்

  கலோரி அளவு: 1 Tbspn = 90 கலோரி ]


****************************************************

வெங்காய சட்டினி[Onion Chutney]


தேவையான பொருட்கள்

*உரித்த சிறு வெங்காயம் - 1 கப்
*பூண்டு - 6 பல்லு
*காய்ந்த மிளகாய் - 8
*கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
*உப்பு - தேவையான அளவு
*புளி - சிறிது

செய்முறை

எண்ணெய் காயவைத்து, மிளகாய், கடலைபருப்பு, பூண்டு, வெங்காயம், இவற்றை பொன்னிறமாக வதக்கவும். உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலை சேர்த்து மேலே ஊற்றவும்.

[கிடைக்கும் அளவு: 4 பேருக்கு பரிமாறலாம்

 கலோரி அளவு: 100gms = 50 கலோரி ]

Monday, March 1, 2010

சிற்றுண்டி வகைகள் [ Breakfast/Tiffin Recipes] - தோசை/அடை/உப்புமா/வெண பொங்கல்

வெண் பொங்கல்[ Rice Pongal]


தேவையான பொருட்கள்

* 1 கப் பச்சரிசி
*1/2 கப் பயத்தம் பருப்பு (பாசி பருப்பு)
*1/4 டீஸ்பூன் மிளகு
*1/2 டீஸ்பூன் சீரகம்
*இஞ்சி -3 " துண்டு
*பச்சை மிளகாய் - 2
*கறிவேப்பிலை -5 இலைகள்
*பெருங்காயம் -சிறிதளவு
*முந்திரி -10 பருப்புகள்
*உப்பு- தேவையான அளவு
*எண்ணெய்- 3 ஸ்பூன்
*நெய்- 4 ஸ்பூன்
*பால் -1 டம்பளர்


செய்முறை

1.  முதலில் அரிசியையும் பருப்பையும் களைந்து குக்கரில் நன்கு வேக விடவும்.
2.  பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு சீரகம் மற்றும் முந்திரியைப் போட்டு நன்கு பொரித்துக் கொள்ளவும்.
3.  இப்போது அடுப்பை அணைத்துவிட்டு பொடிப் படியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தைப் போட்டு கரண்டியால் நன்கு கலக்கவும்.
4.  பிறகு பாலை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பால் நன்கு கொதித்த உடன் வேக வைத்த அரிசி பருப்பை அதில் கொட்டி உப்பு போட்டு அடி பிடிக்காமல் நன்கு கிளறவும்.
5.  பொங்கல் சரியான பதத்திற்கு வந்த உடன் 4 ஸ்பூன் நெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.

[கிடைக்கும் அளவு: 4 பேருக்கு பறிமாறலாம்

கலோரி அளவு: 1 ப்லேட் பொங்கல் = 243]

***************************************************
 துவரம்பருப்பு அடை[ Thuvar Adai]
 
தேவையான பொருட்கள


*இட்லிஅரிசி -2 கப்
*துவரம்பருப்பு -1/2 கப்
*வெங்காயம் -1 [தேவையானால்]
*தேங்காய்துறுவல் -3 டேபிள்ஸ்பூன்
* மிளகு, சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* பச்சைமிளகாய் - 6
* அரிந்த கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - 2 டேபிள் ஸ்பூன்
*இஞ்சி -1துண்டு
*எண்ணை -தேவையான அளவு
*உப்பு -தேவையான அளவு

செய்முறை

1.  அரிசி, பருப்பு இரண்டையும் 2 அல்லது 3 மணிநேரம் ஊறவைத்து, அத்துடன் தேங்காய்துறுவல், பச்சைமிளகாய், இஞ்சி, சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். சிறிது கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
2.  அரைத்தமாவில் உப்பு போட்டு கலந்து 1/2மணிநேரம் வைக்கவும்.
3.  வெங்காயம்,கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிவைக்கவும்.
4.  அரைத்தமாவில் நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை போட்டு கலக்கவும்.
5.  தோசைக்கல்லை அடுப்பில்வைத்து காய்ந்ததும் ஒருகரண்டி மாவை ஊற்றி சிறிது பரப்பிவிட்டு சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு மூடிவைத்து வேகவிடவும்.
6.  வெந்ததும் திருப்பிபோட்டு இரண்டு பக்கமும் வெந்தவுடன் எடுத்து சட்னியுடன் சாப்பிடவும்.
7.  வெங்காய சட்டினியுடன் சூடாகப் பரிமாறலாம்.

[கிடைக்கும் அளவு: 30 சுமாரான அளவு அடை
கலோரி அளவு: 1 அடை= 87 கலோரி]

****************************************************

ரவா தோசை [ Rava Dosa]


ரவா தோசை

தேவையான பொருட்கள

மாவு கரைக்க
==============

*மெல்லிய ரவை - 1/4 கப்
*அரிசி மாவு - 2 கப்
* மைதா - 1/4 கப்
* புளித்த தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
*உப்பு - 2 டீஸ்பூன்
* உறுக்கிய வெண்ணைய் - 1/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு

ருசிக்கு:

*முந்திரிப் பருப்பு - 10 பருப்பு இரண்டாக உடைத்தது
*முழு குருமிளகு - 1 டீஸ்பூன் [விருப்பப்பட்டால்]
*பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன் [ மிகப் பொடியாக நறுக்கியது]
*ஜீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
*இஞ்சி - 1 இன்ச் துண்டு மிகப் பொடியாக நறுக்கியது
*வெங்காயம் - 2 மிகப் பொடியாக நறுக்கியது
*தோசை சுடுவதற்கு நெய்/எண்ணை - 1/4 கப

செய்முறை

1.   மாவு கரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாய் கரைத்து வைய்யுங்கள். ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.
2.  கரைத்த மாவுடன் ஜீரகத்தை கலந்து வைய்யுங்கள் பிறகு 1/2 ஸ்பூன் நெய்/எண்ணை காயவைத்து அதில் முந்திரி,குருமிளகு சேர்த்து முந்திரி நிறம் மாறியதும் தீயை அனைத்து விட்டு கரைத்த மாவில் கொட்டி கிளறவும்
3.  வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாயை கலந்து வைக்கவும்
4.  தோசை தவாவை காயவைத்து அதில் 1 கரண்டி மாவை சுற்றி ஊற்ற அது தானாகவே பரவிக் கொள்ளும்.
5.  உடனே மேலே 3 ஸ்பூன் வெங்காயம், மிளகாய், இஞ்சி தூவி நெய் தெளித்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி மறுபுறமும் நன்கு மொருகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்
6.  இதற்கு தேங்காய் சட்னி ரொம்பவும் அருமையாக இருக்கும்

குறிப்பு:

மாவு கரைக்க மொத்தமாக எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு சுற்றினால் போதும் ஈசியாக கரைந்து கட்டியில்லாமல் வரும். மொருமொரு ஹோடெல் ரவா தோசைக்கு மாவை பால போல கரைத்துக் கொள்ளுங்கள்..நிறைய தண்ணீர் இருந்தால் நல்ல ஓட்டை ஓட்டையாக தானாக தவாவில் பரவும் தீயை இதற்கு கூட்டியே வைக்க வேண்டும்..பொறுமையாக ஊற்றி ஒரு புறம் நன்கு மொருமொருவென வெந்த பின் திருப்பி போட வேண்டும்

மாற்று செய்முறை

2 ஆழாக்கு மெல்லிய ரவையுடன் 1/2 அழாக்கு மைதா மாவு சேர்த்து மாவைக் கலக்கவும். 3 மணீ நேரம் கழித்து மேற்கூறிய பொருட்கள் கலந்து தோசை சுடவும்.

[கிடைக்கும் அளவு: 20 தோசைகள்
கலோரி அளவு: 1 தோசை = 75 கலோரி]


*************************************************

ரவா உப்புமா[Rava Upuma]

ரவா உப்புமா
தேவையான பொருட்கள்



*மெல்லிய பம்மாய் ரவை - 2 கப்
*தண்ணீர் - 4 1/2 கப்
*வெங்காயம் பெரிது - 3
*பச்சைமிளகாய் - 12
[நீளவாக்கில் அரியவும்]
*கல் உப்பு - 2 டீஸ்பூன் [குவித்து]
*எண்ணையும் நெய்யும் கலந்து - 1/4 கப்

தாளீக்க:

*கடுகு - 1/2 டீஸ்பூன்
*உளுததம் பருப்பு - 1 டீஸ்பூன்
*கடலைப்ப்ருப்பு - 2 டீஸ்பூன்
*உடைந்த முந்திரிப் ப்ருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது

மேலே அலங்கரிக்க:

*நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்
*தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
*எலுமிச்சை - 1

செய்முறை

1. வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
2. ஒரு வாணலியில், எண்ணையும், நெய்யும் விட்டுச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களையும், பிறகு பச்சைமிளகாய், வெங்காயம், சேர்க்கவும்.
3. வெங்காயத்தை சிவக்க வதக்கவும்.
4. பிறகு ரவையைச் சேர்த்து அனலைக் குறைத்து 2 நிமிடம் வறுக்கவும்.
5. அளந்த தண்ணீரை தனியாகச் சூடாக்கி கொதிக்கும் போது இதில் ஊற்றவும். அனலைக் குறைத்து நன்றாகக் கலந்து மூடி வைக்கவும்.
6. ஈரம் வற்றி உப்புமா வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
7. எலுமிச்சம் சாறு பிழிந்து, நன்றாகக் கிளறிவிட்டு, தேங்காய்த் துருவல்,  அரிந்த மல்லித் தழை இவற்றை மேலே தூவி அலங்கரிக்கவும்.

[கிடைக்கும் அளவு: 4 [அ] 5 பேருக்கு பரிமாறலாம்.
எண்ணையோடு சேர்த்து மொத்த கலோரி அளவு: 1758]

Thursday, February 25, 2010

சிற்றுண்டி வகைகள் [ Breakfast/Tiffin Recipes] - அவித்த உணவு வகைகள்

தமிழர்களின் உணவில் இட்லி, புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்றவை நீராவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை

உணவுகள். பெரும்பாலும் அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படுவதால், இவற்றில் கார்போஹைட்ரேட்ஸ் (Carbohydrates) அதிக அளவில் உள்ளது.

நீராவியில் வேக வைத்து எடுக்கும் உணவுகள் சிலவற்றை இங்கே, உங்களுக்காக தொகுத்துத் தரப்பட்டுள்ளது.



பிடிகொழுக்கட்டை

பிடிகொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

*இடியப்ப மாவு - 2 கப்
*தண்ணீர் - 2 கப்
*உப்பு - 1/2 ஸ்பூன்

தாளிக்க

*தே.எண்ணை - 3 ஸ்பூன்
*கடுகு - 1/2 ஸ்பூன்
*கடலை பருப்பு - 2 ஸ்பூன்
*சின்ன வெங்காயம் - 10
*பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
*கறிவேப்பிலை - 1 இனுக்கு பொடியாக நறுக்கியது
*இஞ்சி - 1 மிகச்சிறிய துண்டு பொடியாக நறுக்கியது
*தேங்காய் துருவல் - 1/2 கப்
*மல்லி இலை - 1 கைப்பிடி பொடியாக நறுக்கியது

செய்முறை

1.  தண்ணீரை காயவைத்து பெரிய பெரிய பாத்திரத்தில் குழைக்க ஏதுவாக மாவையும் உப்பும் கொட்டிவைக்கவும்
2.  பின் தே.எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை வரிசையாக தாளித்து பச்சை தேங்காய் துருவலையும் மல்லியிலையையும் மாவில் கொட்டி
3.  கொதித்த தண்ணீர் விட்டு மரக்கரண்டியால் கிளற கிளற திரண்டு வரும்..முழுவதுமாக தண்ணீர் சேர்த்து விடாமல் 3/4 கப் அளவு சேர்த்து போதவில்லையென்றால் கூடுதல் சேர்க்கவும்..பின் கொழுக்கட்டைகளாக கைய்யால் அல்லது அச்சால் பிடித்து இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்

குறிப்பு:

இதனை சும்மாவே சாப்பிட சுவையாக இருக்கும்.. தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

[ பரிமாறும் அளவு:  4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள் ]

******************************************

குழாய் புட்டு

தேவையான பொருட்கள்


*பச்சரிசி மாவு - 1 கப்
*வெல்லம் - ருசிக்கேற்ப
*உப்பு - ஒரு சிட்டிகை
*தேங்காய் துருவல் - 1 கப்

செய்முறை

1. பச்சரிசி மாவுடன் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து புட்டு பதத்திற்கு கொண்டு வரவும்.
2. இதை ஜல்லடையில் ஈரத்துடனே சலித்து வைக்கவும்.
3 பின் குழாய் புட்டு செய்யும் குழாயில் முதலில் அரிசிமாவு பின் வெல்லம், தேங்காய் பின் அரிசிமாவு என்னும் விதத்தில் வைத்து வேக வைக்கவும்.
4. வெந்தபின் வெளியே எடுத்து கத்தியால் கட் செய்து பரிமாறலாம்.
5. சுவையான குழாய் புட்டு ரெடி.


 [ பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள் ]

*****************************************
 
இடியாப்பம்[Idiyappam]

 


தேவையான பொருட்கள்

*புழுங்கல் அரிசி - 3 கப்
*பச்சரிசி - ஒரு கைப்பிடி
*நல்லெண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
*உப்பு - 2 1/2 டீஸ்பூன்

செய்முறை

1.  அரிசியை ஐந்து மணி நேரம் ஊற வைத்து நன்கு கழுவி உப்பு சேர்த்து அரைக்கவும். மிகவும் நைசாகவும் இருக்கக் கூடாது. மிகவும் கொர கொரப்பாகவும் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு அரைத்து வழிக்கவும்.
2.  அடுப்பில் ஒரு கடாயை (நான் ஸ்டிக்காக இருந்தால் மிகவும் உகந்தது) வைத்து நல்லெண்ணய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி கிண்டவும்.
3.  கெட்டியானதும் இறக்கவும்.
4.  இட்லி பானையை வைத்து தட்டில் மாவை இடியாப்ப நாழியில் போட்டு பிழியவும்.
5.  ஐந்து நிமிடத்தில் எடுத்து சூடாகவே தட்டில் கவிழ்க்கவும்.
6.  தேங்காய் பாலுடன் பரிமாறவும்.

[ கிடைக்கும் அளவு: 6 பேருக்கு பரிமாறலாம்

  சமைக்கும் நேரம்:  30 நிமிடம
  மொத்த இடியாப்பத்தின் கலோரி அளவு: 2457 கலோரி]

********************************************************
 
ஸ்டஃப்டு இட்டிலி[ Stuffed Idli]

 தேவையான பொருட்கள்

*இட்டிலி மாவு - 3 கப்
*உருளைக்கிழங்கு - 100 கிராம்
*பச்சைப்பட்டாணி - 100 கிராம்
*காரட் - 100 கிராம்
*பெரிய வெங்காயம் - 100 கிராம்
*குடைமிளகாய் - 2
*எண்ணெய் - 2 தேக்கரண்டி
*கடுகு - அரை தேக்கரண்டி
*கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு
*பச்சைமிளகாய் - 2

செய்முறை

1.  அனைத்து காய்கறிகளையும் சுத்தப்படுத்தி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.  கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, காய்கறி, உப்பு, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கவும்.
3.  எண்ணெய் தடவிய இட்டிலி தட்டில் கால் கரண்டி மாவை விட்டு ஒரு தேக்கரண்டி காய்கறி மசாலா பரப்பி அதன்மேல் மேலும் சிறிது மாவு ஊற்றவும்.
4.  இப்போது இட்டிலியை நன்றாக வேகவிட்டு இறக்கி, சூடாக எடுத்துப் பரிமாறவும்
 [ கிடைக்கும் அளவு:  45

   சமைக்கும் நேரம்: 30 நிமிடம
   கலோரி அளவு: 1  இட்டிலி = 65 கலோரி ]

***********************************************

ரவா இட்டிலி [ Rava Idli] 

தேவையான பொருட்கள்


*ரவை -2 கப் [குவித்து]
[பம்பாய் ரவை]
*புளித்த தயிர் - 2 கப் *உப்பு - 1 1/2 டீஸ்பூன்
*நெய்யும், எண்ணையும் - 5 டேபிள் ஸ்பூன்
*கொத்தமல்லி & கறிவேப்பிலை - 2 டேபிள் ஸ்பூன்
*பச்சைமிளகாய் - 10
*வேகவைத்த பட்டாணி - 1/4 கப் [தேவையானல்]

மேலே அலங்கரிக்க:

*துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
*தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

*உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
*கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/4 டீஸ்பூன்
*உடைத்த முந்திரிப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்


செய்முறை

1.  ரவையை இலேசாக வறுத்து 2 கப் தயிரில் ஊற வைக்க வேண்டும்.
2.  பிறகு ஒரு மணி நேரம் ஊறியதும் நெய்யில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, முந்திரிபருப்பு மேற்கூறிய அளவு படி தாளித்து ஊறிய ரவை மாவில் போடவும்.
3.  கொத்தமல்லி தழையை நன்றாக பொடியாக நறுக்கி போடவும். அத்துடன் உப்பையும் போட்டு கிளறி எண்ணைய் தடவிய இட்லி தட்டில் சாதாரண இட்டிலி ஊற்றுவது போல் கரைத்து, இட்டிலி போல் ஊற்றவும்.
4.  பத்து நிமிடம் கழித்து, வெந்ததும் எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
5.  காரட் துருவல் [அ] தேங்காய் துருவல் சேர்க்க வேண்டுமானால், எண்ணைய் தடவிய இட்டிலித் தட்டின் மீது துளி அதன் மீது ரவை கலவையை ஊற்றவும்.

[கிடைக்கும் அளவு: 20 இட்டிலிகள்

 கலோரி அளவு: 1 இட்டிலி = 110 கலோரி]

**********************************************

காஞ்சிபுரம் இட்டிலி [Kanjeevaram Idli ]

தேவையான பொருட்கள்

*பச்சரிசி - 2 கப் [குவித்து]
*முழு உளுத்தம் பருப்பு - 2 கப் [தலைதட்டி]
*உப்பு - 3 டீஸ்பூன்
*உருக்கிய நெய் - 4 டீஸ்பூன்
*மிளகு - 2 டீஸ்பூன்
*சீரகம் - 2 டீஸ்பூன்
*கெட்டித் தயிர் - 1/2 லிட்டர்
*சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்

செய்முறை

1. பருப்பையும் அரிசியையும் 1 [அ] 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். [மாவு கெட்டியாக இருக்க வேண்டும். கழுவிய தண்ணீரை சேர்க்க வேண்டாம்]
3. அடுத்த நாள் வரை அப்படியே வைக்கவும்.
4. இட்டிலி தயாரிக்குமுன் உருகிய நெய், எண்ணைய், மிளகு, சீரகம், தயிர், சோடா இவற்றை மாவோடு சேர்க்கவும்.
5. பெரிய குக்கர் தட்டுக்கு எண்ணைய் தடவி 1 அங்குல உயரத்திற்கு மாவை ஊற்றவும்.
6. சுமார் 30 முதல் 40 நிமிடம் வரை நன்றாக ஆவியில் வேக வைக்கவும்.
7. இட்டிலியை மிளகாய்ப் பொடியுடன் பரிமாறவும்.


[ கிடைக்கும் அளவு: 32 சிறிய இட்டிலி 2

  கலோரி அளவு: 1 இட்டிலி = 138 கலோரி ]

Wednesday, February 10, 2010

சிற்றுண்டி வகைகள் [ Breakfast/Tiffin Recipes] - தந்தூரி வட இந்திய சப்பாத்தி / பரோட்டா / பூரி வகைகள்

சிறிய அளவில் உண்ணப்படும் உணவு வகைகளை சிற்றுண்டி என்கின்றோம். நமது தமிழ்நாட்டு வழக்கத்தில் சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி, பொங்கல் போன்ற உணவுகளும், வடை, போண்டா போன்ற பலகார வகைகளும் சிற்றுண்டியாக உள்ளன. காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுவாக இந்த வகை உணவுகள் உட்கொள்ளப்படுகின்றன.

பெரும்பாலும் சிற்றுண்டி வகை உணவுகள் தானியங்களைக் கொண்டு அல்லது அரைத்த தானிய மாவுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. தானியங்களில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்ஸ் (Carbohydrates) இருக்கின்றது. புரதம் (Protein), தாதுக்கள் (Minerals), நார்ச்சத்து (Fibre) போன்றவையும் நிறைந்து உள்ளது. முதலில், சப்பாத்தி வகைகள் எடுத்துக் கொள்வோம்.

தந்தூரி வட இந்திய சப்பாத்தி / பரோட்டா / பூரி வகைகள்
**************************************

புல்கா/சுக்கா சப்பாத்தி [Pulkas]





தேவையான பொருட்கள்
  • கோதுமை மாவு - 2 கப் குவித்து
  • தண்ணீர் - மாவைப் பிசைவதற்குத் தேவையான அளவு
  • உப்பு - விருப்பமானால்
  • எண்ணை - 2 டீஸ்பூன்
செய்முறை
1. கோதுமை மாவுடன் உப்பு [தேவையானால்], மற்றும் நீர் விட்டு சற்று இளக்கமாக  பிசைந்து கொள்ளவும்.
2. பிசைந்த மாவினை ஒரு ஈரத்துணிக்க் கொண்டு மூடி வைக்கவும். இல்லையெனில் வெறும் பாத்திரத்திலும் மூடி வைக்கலாம்.
3. சுமார் 3 மணி நேரம் சென்ற பிறகு எடுத்து, மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும்.
4. மாவு மிகவும் நீர்த்து இருப்பின் வெறும் மாவில் தேய்த்து சப்பாத்திகளாக இடவும். மிகவும் மெல்லியதாக தேய்த்தல் அவசியம்.
5. ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சப்பாத்தியைப் போட்டு, லேசாக காய்ந்ததும் ஒரு கிடுக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாக காட்டி வேகவிடவும்.
6. சப்பாத்தி வெந்து பூரி போல் எழும்பி வரும். இதே போல் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
7. சப்பாத்தி கருகாத அளவிற்குப் பார்த்துக் கொள்ளவும். எண்ணெய் இல்லாமல் இப்படி செய்யப்படும் சப்பாத்தியே புல்கா ரொட்டி ஆகும்.
8. சப்பத்தியை ஒரு முறை கையினால் லேசாகக் கசக்கி முக்கோணமாக மடித்து மெல்லிய துணி விரிக்கப் பட்டுள்ள பெட்டியில் மூடி வைக்கவும்.
9. விருப்பமானால் மடிப்பதற்கு முன் ஒரு பக்கம் சிறிது நெய் தடவலாம்.

[கலோரி அளவு: 1 புல்கா- 73 கலோரி

கிடைக்கும் அளவு: 14 சப்பாத்திகள்]


**************************************************

காலிப்ளவர் சப்பாத்தி[Cauliflower Chapati]

உள்ளே நிறப்பும் மசாலாவுக்குத் தேவையான பொருட்கள்:

*காலிப்ளவர் - 1 சிறியது
*வெங்காயம் - 1
*பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை - 2 லேபிள் ஸ்பூன்
*பொடி உப்பு - 1 டீஸ்பூன்
*கரம் மசாலாப் பொடி - 1/4 டீஸ்பூன்
*தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*சர்க்கரை - 1 டீஸ்பூன்
*வெண்ணைய் - 2 டேபிள் ஸ்பூன்
*மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

1. காலிப்ளவரைக் கழுவி 1 மணி நேரம் உப்பு சேர்த்த தண்ணீரில் ஊற வக்கவும்.
2. பிறகு நன்றாகக் கழுவி முழு பூவை கையில் வைத்துக் கொண்டு ஸ்டீல் துருவி உபயோகப்படுத்தி பொடியாக துறுவவும்.
3. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
4. வாணலியில் வெண்ணையைச் சூடாக்கி சீரகம் போட்டு தாளிக்கவும்.
5. துருவிய காளிப்ளவர் சேர்த்து நல்ல அனலில் பச்சை வாசனைப் போகும்வரை கிளரிவிட்டு வதக்கவும்.

"ஸ்டப் சப்பாத்தி" செய்யும் முறை:


1. ஓர் உருண்டையை எடுத்து 3 அங்க்குல அகலமுள்ள சப்பாத்தியாக இடவும். மற்றோன்று அதே அளவில் செய்யவும்.
2. ஒரு சப்பாத்தியின் நடுவில் ஒரு டேபிள் ஸ்பூன் மசாலாவை சுற்றிலும் 1/4 அங்குல இடைவெளி இருக்கும்படி பரப்பவும்.
3. மற்றோரு சப்பாத்தியை அதன் மீது வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி ஒன்றோடு ஒன்றை ஒட்டி விடவும்.
4. மாவில் புரட்டி எடுத்து பெரிய கனமான சப்பாத்தியாக கவனமாக இடவும்.
5. சூடான தோசைக்கல்லில் இவ்வொரு பக்கத்திற்கும் 1/4 டீஸ்பூன் எண்ணைய் விட்டுச் சுடவும்.
6. "ஸ்டப் காலிப்ளவர் சப்பாத்தி" சூடாகப் பரிமாறவும்.

[மொத்த கலோரி மதிப்பு: 355 கலோரிகள்]

****************************************************************

வெந்தய ரொட்டி [Methi Roti]

தேவையான பொருட்கள்:

*கோதுமை மாவு - 2 கப்
*வெந்தய கீரை - 2 கட்டு
[இலைகளை மைடும் அரியவும்]
*பொடி உப்பு - 1 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
*எண்ணைய் - 2 டேபிள் ஸ்பூன்
[மாவுக்கு]
*தனியத்தூள் - 1 டீஸ்பூன்
*மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
*சீரகம் [அ] ஓமம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1. எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும்.
2. தேவையான் தண்ணீர் தெளித்து, மிருதுவான மாவாகப் பிசையவும்.
3. சுமாரான கனமுள்ள சப்பாத்திகள் தயாரிக்கவும்.
4, சூடான தோசைக்கல்லின் மேலே சப்பாத்தியைப் போட்டு இருபுறமும் 1/2 டீஸ்பூன் எண்ணைய் விட்டுச் சுடவும்.

குறிப்பு:

வெந்தயக் கீரையை அரிந்தவுடன் கசப்பேறுமுன் உடனே மாவுடன் கலக்கவும். வெந்தய கீரை பரோட்டா தயாரிக்க மாவைக் கலக்கும் போது எண்ணைய் அதிகமாக விடவும். ரொட்டியை விட பரோட்டாவை கனமாக இடவும்.


[கிடைக்கும் அளவு: 12 ரொட்டிகள்]
 கலோரி அளவு: 1 ரொட்டி - 112 கலோரி]


*****************************************************
 
நான் [ Naan]

தேவையான பொருட்கள்:

*மைதா - 500 கிராம்
*புளிக்காத கெட்டித் தயிர் - 1/2 கப்
*வெதுவெதுப்பான பால் - 1/2 கப்
*உலர்ந்த ஈஸ்ட் - 3/4 டீஸ்பூன்
*சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
*பொடி உப்பு - 1 1/4 டீஸ்பூன்
*பேக்கிங் பௌடர் - 3/4 டீஸ்பூன்
*சமயல் சோடா - 3/4 டீஸ்பூன்
*உருகிய நெய் [அ] வெண்ணைய் - 4 டீஸ்பூன்

செய்முறை:

1. மைதாவோடு உப்பு, பேக்கிங் பௌடர், சோடா இவற்றை சேர்த்து மும்முறை சலிக்கவும்.
2. ஈஸ்டை வெது வெதுப்பான பாலில் கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
3. சலித்த மாவை ஒரு அகலப் பாத்திரத்திலிட்டு, நடுவில் ஒரு குழி செய்யவும்.
4. ஈஸ்ட் கரைந்த பால், தயிர், சர்க்கரை இவற்றை அந்த குழியில் ஊற்றவும்.
5. ஒரு நிமிடம் கழித்து, உருகிய நெய் சேர்த்து மாவை நன்றாகக் கலக்கவும்.
6. பிசையும் பொழுது தேவைப்பட்டால் வெந்நீர் தெளித்து தளர்த்தியான மாவாகப் பிசையவும்.
7. ஒரு அகலமான் பேஸினில் சிறிது எண்ணைய் தடவி, மாவை அதில் போட்டு மேலே மெல்லிய ஈரத்துணிக் கொண்டு மூடி, அதன் மேலே ஒரு தட்டு வைத்து மூடவும். மாவு பொங்கி வர இடைவேளி இருக்குமாறு வைக்கவும். 5 [அ] 6 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு பிரட் மாவு போல பொங்கி இருக்கும். சிறிது பெரிய உருண்டைகள் செய்யவும்.
8. உருட்டுக் கட்டையால் 1/4 அங்குல தடிமனாக வட்டமாக உருட்டவும்.
9. ஒரு நுணியை கையால் இழுத்து பூசினி விதை போன்ற வடிவமாக்கவும்.
10. அதன் மேல் பக்கம் சிறிது தண்ணீர் தடவி, சூடான பாலின் மேல் [ Flat pan with handle] தண்ணீர் தடவிய பக்கம் ஒட்டும்படி போடவும்.
11. மிதமான அளவில் வைத்து மேலே மூடியால் மூடவும்.
12. மூடியைத் திறந்தால், நான் [ Naan] உப்பி வந்திருக்கும். பானின் பிடியைப் பிடித்து, தலைகீழாகத் திருப்பி நேரிடை அனலில் காட்டி மற்றொரு பக்கத்தை பொன்னிறமாக சுடவும்.
13. சிறிது வெண்ணைய் தடவி சூடாகப் பரிமாறவும்.


[கலோரி அளவு: 1 நான் [ Naan] - 136 கலோரி
கிடக்கும் அளவு: 15 சுமாரான அளவுள்ள நான் [Naan] தயாரிக்கலாம்]

*************************************************
 
பரோட்டா[Parotta]

தேவையான பொருட்கள்:

*மைதா - 4 கப் [குவித்து]
*பேகிங் பௌடர் - 1/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
*சமயல் சோடா - 3 சிட்டிகை
*பொடி உப்பு - 1 1/2 டீஸ்பூன்
*எண்ணைய் - 1/2 கப்

செய்முறை:

1. மைதாவோடு, பேக்கிங் பௌடர், உப்பு, சோடா இவற்றைச் சேர்த்து இருமுறை சலிக்கவும்.
2. மாவோடு,  2 முதல் 3 டீஸ்பூன் எண்ணைய், சர்க்கரை, இவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
3. போதுமான தண்ணீர் விட்டு, மிருதுவான, தளர்த்தியான மாவாகப் பிசையவும்.
4. ஒரு எண்ணைய் தடவிய கல்லின் மேல் மாவை பல நிமிடங்கள் அடித்து நன்றாக பிசையவும்.
5. பிசைத்த மாவை ஒரு கிண்ணத்தில் போட்டுமாவின் மேல் பக்கம் எண்ணைய் விட்டு 5 லிருந்து 6 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.
6. கல்லின் மேல் மாவை, இன்னொரு முறை அடித்து பிசையவும்.
7. ஆரஞ்சு அளவுள்ள உருண்டைகளாகச் செய்யவும்.
8. எண்ணைய் தடவிய கல்லின் மேல் ஓர் உருண்டையை வைத்து கையினால் அதை மெல்லிய வட்டமாகத் தட்டிப் பரப்பவும்.
9. மேலே சிறிது எண்ணைய் தடவி, சிறிது மைதா தூவி, கொசவம் போல்[pleats] மடித்து வந்து நடுவில் ஒன்றாக சேர்க்கவும்.
10. இரு முனைகளிலிருந்து சுருட்டினால் நடுவில் இரு உருண்டைகள் வரும்படி சுருட்டவும்.
11. ஒன்றின் மீது ஒன்று வத்து மெதுவாக தட்டையாக்கவும்.
12. எல்லா உருண்டைகளையும் இவ்வாறே செய்து அதே எண்ணையில் முழக்கி வைக்கவும்.
13. சுடுவதற்கு முன், உருண்டையை லேசாகத் தட்டி கனமான பரோட்டாவாக கையினால் தட்டவும்.
14. சுமாரான அளவில்தோசைக்கல் வைத்து பரோட்டாவுக்கு இருபுறமும் எண்ணைய் விட்டுச் சுடவும்.
15. அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு துணியால் பக்கங்களை அழுத்தி, பின், தளர்த்தி சூடாகப் பரிமாறவும்.


[கிடைக்கும் அளவு:- 20 பரோட்டாக்கள்
கலோரி அளவு: 1 பரோட்டா = 133 கலோரி]


*********************************************

வெந்தயக் கீரை இஞ்சி ரொட்டி[ Methi Ginger Roti]

தேவையான பொருட்கள்:

*கோதுமை மாவு - 1 1/2 கப்
*அரிசி மாவு - 3/4 கப்
*சிரோட்டி ரவை - 1/2 கப்
*பொட்டுக் கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
*பொடியாக அரிந்த வெங்காயம் - 1 1/2 கப்
*பொடியாக நறுக்கிய வெந்திய கீரை - 1/2 கப்
*பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
*இஞ்சி - 1/4 அங்குலத் துண்டு

செய்முறை


1. உலர்ந்த பொருட்களையெல்லாம் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணைய் விட்டு கலக்கவும்.
2. சிறிது தண்ணீர் விட்டு இஞ்சியை அரைத்து வ்டிகட்டி விடவும்.
3. இந்த இஞ்சி சாற்றையும், கீரை, மிளகாய் விழுது மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
4. திட்டமான தண்ணீர் விட்டு கெட்டியான மாவாகப் பிசையவும்.
5. சிறிய உருண்டைகளாகச் செய்து ஓர் ஈரத்துணியைப் பரப்பி அதன் மேலே உருண்டையை ரொட்டிகளாகத் தட்டவும்.
6. தோசைக் கல்லை காய வைத்து தேவையான எண்ணைய் விட்டு இருபுறமும் சிவக்க சுடவும்.
7. சூடாகப் பரிமாறவும்.

[கிடைக்கும் அளவு: 18 ரொட்டிகள்

கலோரி அளவு: 1 ரொட்டி = 94 கலோரி
[எண்ணைய் இல்லாமல்]

******************************************************

காக்ரா [Khakra ]

தேவையான பொருட்கள்


*கோதுமை மாவு - 2 கப்
*பொடி உப்பு - 3/4 டீஸ்பூன்
*தண்ணீர் - மாவை பிசைவதற்கு
தேவையான அளவு


செய்முறை:



1. தேவையான அளவு தண்ணீர் விட்டு, மாவை கெட்டியாகப் பிசையவும்.
2. பல நிமிடங்கள் நன்றாகப் பிசையவும்.
3. 16 உருண்டைகளாக உருட்டி ஒவ்வொன்றையும் மிக மெல்லிய சப்பாத்தியாக இடவும்.
4. ஒரு மெல்லிய தோசைக்கல் வைத்து சப்பாத்தியின் இருபுறமும் சிறிது நெய் தடவி, சிறிது பொன்னிறமாக சுடவும்.
5. எல்லா சப்பத்திகளையும் அவ்வாறே சுட்டு வைக்கவும்.
6. ஒரு தடிப்பான தோசைக் கல்லை அடுப்பில் வைக்கவும்.
7. கல் சூடானதும், தயாரித்த சப்பாத்தியை மேலேயிட்டு மெல்லிய துணியை உருட்டி ஒரே சீராக சப்பாத்தியின் மேல் அழுத்தவும். அதே நேரத்தில், சப்பாத்தி பழுப்பு நிறமாகும் வரை சுற்றி சுற்றி உருட்டவும்.
8. திருப்பிப் போட்டு சப்பாத்தி முறுகலாகும் வரை அதே போல் சுடவும்.


மாற்று செய்முறை:



மசாலா காக்ரா செய்ய மாவுடன் மஞ்சள் தூள், ஓமம், மிளகாய் தூள் சேர்கவும்.


குறிப்பு:


இவ்வகை சப்பாத்திகள் முறுக்கு போல முறுகலாக இருக்கும். ஒரு மாதம் வரை கெடாது. சப்பாத்தியை சுடும் போது பல தடவை திருப்பிப் போடக் கூடாது. ஒரே தடவை தான் திருப்ப வேண்டும். இல்லாவிடில்,  சப்பாத்தி உடைந்து விடும்.


[கிடைக்கும் அளவு - 16 காக்ரா

கலோரி அளவு: 1 காக்ரா = 78 கலோரி -
நெய்யும் சேர்த்து]

************************************************************

பட்டூரா [Bhatura]

தேவையான பொருட்கள்

*மைதா - 2 கப் [குவித்து]
*புளிக்காத கெட்டித் தயிர் - 1/2 கப்
*பால் - 1/4 கப்
*எண்ணைய் - 1 1/2 டீஸ்பூன்[மாவுக்கு]
*சமயல் சோடா - 3 சிட்டிகை
*உப்பு - 3/4 டீஸ்பூன்

செய்முறை

1. மாவு. உப்பு, சோடா. எண்ணைய் இவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும்.
2. தயிர், பால் சேர்த்து நன்றாகப் பிசையவும். [தேவையானால் பிசையும் போது இன்னும் பால் சேர்த்துக் கொள்ளவும்]
3. மூன்று மணி நேரம் மூடி வைக்கவும்.
4. மைதா மாவில் புரட்டி வழக்கமான பூரியை விட சற்று கனமாக பெரிய சப்பாத்தி போல் இடவும்.
5. பெரிய வாணலியில் எண்ணைய் காயவைத்து ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகப் பொரிக்கவும்.
6. கொண்டைக் கடலை மசாலாவோடு சூடாகப் பரிமாறவும்.


[கிடைக்கும் அளவு: 8 பட்டூராக்கள்

கலோரி மதிப்பு: 1 படூரா = 185 கலோரி]

**********************************************************

பூரி [Plain Puri]



பூரி
தேவையான பொருட்கள்

*கோதுமை மாவு - 2 கப் [குவித்து]
*உப்பு - 1/4 டீஸ்பூன்
*சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
*நெய் [அ] வனஸ்பதி] - 1 டீஸ்பூன்
*பேகிங் பௌடர் - 1/4 டீஸ்பூன்
*மாவைப் பிசைவதற்குத் தேவையான தண்ணீர் [அ] பால்
*எண்ணைய் - பூரி பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை

1
. மாவு, உப்பு, பேக்கிங் பௌடர் இவற்றை சலிக்கவும்.
2. சர்க்கரை, நெய், மாவு இவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும்.
3. கொஞ்சம் கொஞ்சமாகப் பால் [அ] தண்ணீர் விட்டு மாவை மிருதுவாகப் பிசையவும்.
4. 1 [அ] 2 மணி நேரம் மூடி வைக்கவும்.
5. சிறு உருண்டைகளாக செய்து பூரி இடவும்.
6. வாணலியில் எண்ணைய் காய வைத்து ஒவ்வொன்றாகப் பொரிக்கவும்.

*குறிப்பு:

சிறிதளவு சர்க்கரை சேர்ப்பதால், பூரி நன்றாகப் பொங்கி வரும்.

*மாற்று பூரிகள் செய்முறை
1. கேரட் பூரி: காரட்டைத் துருவி சிறிது நேரம் ஆவியில் வேக வைக்கவும். விழுதாக அரைத்து மாவுடன் கலக்கவும்.
2. மிருதுவான பூரி தயாரிக்க கோதுமை மாவோடு, அரை கப் மைதா சேர்க்கவும்.
3. மசாலா பூரி: புளிப்புத் தயிர், சீரகம், காய்ந்த மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், அரிந்த மல்லித் தழை, இவற்றை மாவோடு சேர்த்துக் கலக்கவும்.
4. தக்காளி பூரி: வடிகட்டிய தக்காளி ஜூஸ், சீரகம், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், இவற்றை மைதாமாவு அல்லது கோதுமை மாவுடன் சேர்த்து மாவு பிசையவும்.
5. காரப் பூரி: மூன்று கப் கோதுமை மாவோடு, 2 டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் ரவை, உப்பு, மிளகாய்த் தூள், சிறிது ஓமம், நெய் இவற்றை சேர்த்து அளவான தண்ணீர் விட்டு, கெட்டியாக மாவு பிசைந்து, பூரி தயாரிக்கவும்.

 [கிடைக்கும் அளவு: 18 பூரிகள்
கலோரி அளவு: 1 பூரி = 80 கலோரி]
Related Posts with Thumbnails