Thursday, February 25, 2010

சிற்றுண்டி வகைகள் [ Breakfast/Tiffin Recipes] - அவித்த உணவு வகைகள்

தமிழர்களின் உணவில் இட்லி, புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்றவை நீராவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை

உணவுகள். பெரும்பாலும் அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படுவதால், இவற்றில் கார்போஹைட்ரேட்ஸ் (Carbohydrates) அதிக அளவில் உள்ளது.

நீராவியில் வேக வைத்து எடுக்கும் உணவுகள் சிலவற்றை இங்கே, உங்களுக்காக தொகுத்துத் தரப்பட்டுள்ளது.



பிடிகொழுக்கட்டை

பிடிகொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

*இடியப்ப மாவு - 2 கப்
*தண்ணீர் - 2 கப்
*உப்பு - 1/2 ஸ்பூன்

தாளிக்க

*தே.எண்ணை - 3 ஸ்பூன்
*கடுகு - 1/2 ஸ்பூன்
*கடலை பருப்பு - 2 ஸ்பூன்
*சின்ன வெங்காயம் - 10
*பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
*கறிவேப்பிலை - 1 இனுக்கு பொடியாக நறுக்கியது
*இஞ்சி - 1 மிகச்சிறிய துண்டு பொடியாக நறுக்கியது
*தேங்காய் துருவல் - 1/2 கப்
*மல்லி இலை - 1 கைப்பிடி பொடியாக நறுக்கியது

செய்முறை

1.  தண்ணீரை காயவைத்து பெரிய பெரிய பாத்திரத்தில் குழைக்க ஏதுவாக மாவையும் உப்பும் கொட்டிவைக்கவும்
2.  பின் தே.எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை வரிசையாக தாளித்து பச்சை தேங்காய் துருவலையும் மல்லியிலையையும் மாவில் கொட்டி
3.  கொதித்த தண்ணீர் விட்டு மரக்கரண்டியால் கிளற கிளற திரண்டு வரும்..முழுவதுமாக தண்ணீர் சேர்த்து விடாமல் 3/4 கப் அளவு சேர்த்து போதவில்லையென்றால் கூடுதல் சேர்க்கவும்..பின் கொழுக்கட்டைகளாக கைய்யால் அல்லது அச்சால் பிடித்து இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்

குறிப்பு:

இதனை சும்மாவே சாப்பிட சுவையாக இருக்கும்.. தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

[ பரிமாறும் அளவு:  4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள் ]

******************************************

குழாய் புட்டு

தேவையான பொருட்கள்


*பச்சரிசி மாவு - 1 கப்
*வெல்லம் - ருசிக்கேற்ப
*உப்பு - ஒரு சிட்டிகை
*தேங்காய் துருவல் - 1 கப்

செய்முறை

1. பச்சரிசி மாவுடன் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து புட்டு பதத்திற்கு கொண்டு வரவும்.
2. இதை ஜல்லடையில் ஈரத்துடனே சலித்து வைக்கவும்.
3 பின் குழாய் புட்டு செய்யும் குழாயில் முதலில் அரிசிமாவு பின் வெல்லம், தேங்காய் பின் அரிசிமாவு என்னும் விதத்தில் வைத்து வேக வைக்கவும்.
4. வெந்தபின் வெளியே எடுத்து கத்தியால் கட் செய்து பரிமாறலாம்.
5. சுவையான குழாய் புட்டு ரெடி.


 [ பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள் ]

*****************************************
 
இடியாப்பம்[Idiyappam]

 


தேவையான பொருட்கள்

*புழுங்கல் அரிசி - 3 கப்
*பச்சரிசி - ஒரு கைப்பிடி
*நல்லெண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
*உப்பு - 2 1/2 டீஸ்பூன்

செய்முறை

1.  அரிசியை ஐந்து மணி நேரம் ஊற வைத்து நன்கு கழுவி உப்பு சேர்த்து அரைக்கவும். மிகவும் நைசாகவும் இருக்கக் கூடாது. மிகவும் கொர கொரப்பாகவும் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு அரைத்து வழிக்கவும்.
2.  அடுப்பில் ஒரு கடாயை (நான் ஸ்டிக்காக இருந்தால் மிகவும் உகந்தது) வைத்து நல்லெண்ணய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி கிண்டவும்.
3.  கெட்டியானதும் இறக்கவும்.
4.  இட்லி பானையை வைத்து தட்டில் மாவை இடியாப்ப நாழியில் போட்டு பிழியவும்.
5.  ஐந்து நிமிடத்தில் எடுத்து சூடாகவே தட்டில் கவிழ்க்கவும்.
6.  தேங்காய் பாலுடன் பரிமாறவும்.

[ கிடைக்கும் அளவு: 6 பேருக்கு பரிமாறலாம்

  சமைக்கும் நேரம்:  30 நிமிடம
  மொத்த இடியாப்பத்தின் கலோரி அளவு: 2457 கலோரி]

********************************************************
 
ஸ்டஃப்டு இட்டிலி[ Stuffed Idli]

 தேவையான பொருட்கள்

*இட்டிலி மாவு - 3 கப்
*உருளைக்கிழங்கு - 100 கிராம்
*பச்சைப்பட்டாணி - 100 கிராம்
*காரட் - 100 கிராம்
*பெரிய வெங்காயம் - 100 கிராம்
*குடைமிளகாய் - 2
*எண்ணெய் - 2 தேக்கரண்டி
*கடுகு - அரை தேக்கரண்டி
*கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு
*பச்சைமிளகாய் - 2

செய்முறை

1.  அனைத்து காய்கறிகளையும் சுத்தப்படுத்தி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.  கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, காய்கறி, உப்பு, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கவும்.
3.  எண்ணெய் தடவிய இட்டிலி தட்டில் கால் கரண்டி மாவை விட்டு ஒரு தேக்கரண்டி காய்கறி மசாலா பரப்பி அதன்மேல் மேலும் சிறிது மாவு ஊற்றவும்.
4.  இப்போது இட்டிலியை நன்றாக வேகவிட்டு இறக்கி, சூடாக எடுத்துப் பரிமாறவும்
 [ கிடைக்கும் அளவு:  45

   சமைக்கும் நேரம்: 30 நிமிடம
   கலோரி அளவு: 1  இட்டிலி = 65 கலோரி ]

***********************************************

ரவா இட்டிலி [ Rava Idli] 

தேவையான பொருட்கள்


*ரவை -2 கப் [குவித்து]
[பம்பாய் ரவை]
*புளித்த தயிர் - 2 கப் *உப்பு - 1 1/2 டீஸ்பூன்
*நெய்யும், எண்ணையும் - 5 டேபிள் ஸ்பூன்
*கொத்தமல்லி & கறிவேப்பிலை - 2 டேபிள் ஸ்பூன்
*பச்சைமிளகாய் - 10
*வேகவைத்த பட்டாணி - 1/4 கப் [தேவையானல்]

மேலே அலங்கரிக்க:

*துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
*தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

*உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
*கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/4 டீஸ்பூன்
*உடைத்த முந்திரிப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்


செய்முறை

1.  ரவையை இலேசாக வறுத்து 2 கப் தயிரில் ஊற வைக்க வேண்டும்.
2.  பிறகு ஒரு மணி நேரம் ஊறியதும் நெய்யில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, முந்திரிபருப்பு மேற்கூறிய அளவு படி தாளித்து ஊறிய ரவை மாவில் போடவும்.
3.  கொத்தமல்லி தழையை நன்றாக பொடியாக நறுக்கி போடவும். அத்துடன் உப்பையும் போட்டு கிளறி எண்ணைய் தடவிய இட்லி தட்டில் சாதாரண இட்டிலி ஊற்றுவது போல் கரைத்து, இட்டிலி போல் ஊற்றவும்.
4.  பத்து நிமிடம் கழித்து, வெந்ததும் எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
5.  காரட் துருவல் [அ] தேங்காய் துருவல் சேர்க்க வேண்டுமானால், எண்ணைய் தடவிய இட்டிலித் தட்டின் மீது துளி அதன் மீது ரவை கலவையை ஊற்றவும்.

[கிடைக்கும் அளவு: 20 இட்டிலிகள்

 கலோரி அளவு: 1 இட்டிலி = 110 கலோரி]

**********************************************

காஞ்சிபுரம் இட்டிலி [Kanjeevaram Idli ]

தேவையான பொருட்கள்

*பச்சரிசி - 2 கப் [குவித்து]
*முழு உளுத்தம் பருப்பு - 2 கப் [தலைதட்டி]
*உப்பு - 3 டீஸ்பூன்
*உருக்கிய நெய் - 4 டீஸ்பூன்
*மிளகு - 2 டீஸ்பூன்
*சீரகம் - 2 டீஸ்பூன்
*கெட்டித் தயிர் - 1/2 லிட்டர்
*சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்

செய்முறை

1. பருப்பையும் அரிசியையும் 1 [அ] 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். [மாவு கெட்டியாக இருக்க வேண்டும். கழுவிய தண்ணீரை சேர்க்க வேண்டாம்]
3. அடுத்த நாள் வரை அப்படியே வைக்கவும்.
4. இட்டிலி தயாரிக்குமுன் உருகிய நெய், எண்ணைய், மிளகு, சீரகம், தயிர், சோடா இவற்றை மாவோடு சேர்க்கவும்.
5. பெரிய குக்கர் தட்டுக்கு எண்ணைய் தடவி 1 அங்குல உயரத்திற்கு மாவை ஊற்றவும்.
6. சுமார் 30 முதல் 40 நிமிடம் வரை நன்றாக ஆவியில் வேக வைக்கவும்.
7. இட்டிலியை மிளகாய்ப் பொடியுடன் பரிமாறவும்.


[ கிடைக்கும் அளவு: 32 சிறிய இட்டிலி 2

  கலோரி அளவு: 1 இட்டிலி = 138 கலோரி ]

Wednesday, February 10, 2010

சிற்றுண்டி வகைகள் [ Breakfast/Tiffin Recipes] - தந்தூரி வட இந்திய சப்பாத்தி / பரோட்டா / பூரி வகைகள்

சிறிய அளவில் உண்ணப்படும் உணவு வகைகளை சிற்றுண்டி என்கின்றோம். நமது தமிழ்நாட்டு வழக்கத்தில் சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி, பொங்கல் போன்ற உணவுகளும், வடை, போண்டா போன்ற பலகார வகைகளும் சிற்றுண்டியாக உள்ளன. காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுவாக இந்த வகை உணவுகள் உட்கொள்ளப்படுகின்றன.

பெரும்பாலும் சிற்றுண்டி வகை உணவுகள் தானியங்களைக் கொண்டு அல்லது அரைத்த தானிய மாவுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. தானியங்களில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்ஸ் (Carbohydrates) இருக்கின்றது. புரதம் (Protein), தாதுக்கள் (Minerals), நார்ச்சத்து (Fibre) போன்றவையும் நிறைந்து உள்ளது. முதலில், சப்பாத்தி வகைகள் எடுத்துக் கொள்வோம்.

தந்தூரி வட இந்திய சப்பாத்தி / பரோட்டா / பூரி வகைகள்
**************************************

புல்கா/சுக்கா சப்பாத்தி [Pulkas]





தேவையான பொருட்கள்
  • கோதுமை மாவு - 2 கப் குவித்து
  • தண்ணீர் - மாவைப் பிசைவதற்குத் தேவையான அளவு
  • உப்பு - விருப்பமானால்
  • எண்ணை - 2 டீஸ்பூன்
செய்முறை
1. கோதுமை மாவுடன் உப்பு [தேவையானால்], மற்றும் நீர் விட்டு சற்று இளக்கமாக  பிசைந்து கொள்ளவும்.
2. பிசைந்த மாவினை ஒரு ஈரத்துணிக்க் கொண்டு மூடி வைக்கவும். இல்லையெனில் வெறும் பாத்திரத்திலும் மூடி வைக்கலாம்.
3. சுமார் 3 மணி நேரம் சென்ற பிறகு எடுத்து, மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும்.
4. மாவு மிகவும் நீர்த்து இருப்பின் வெறும் மாவில் தேய்த்து சப்பாத்திகளாக இடவும். மிகவும் மெல்லியதாக தேய்த்தல் அவசியம்.
5. ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சப்பாத்தியைப் போட்டு, லேசாக காய்ந்ததும் ஒரு கிடுக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாக காட்டி வேகவிடவும்.
6. சப்பாத்தி வெந்து பூரி போல் எழும்பி வரும். இதே போல் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
7. சப்பாத்தி கருகாத அளவிற்குப் பார்த்துக் கொள்ளவும். எண்ணெய் இல்லாமல் இப்படி செய்யப்படும் சப்பாத்தியே புல்கா ரொட்டி ஆகும்.
8. சப்பத்தியை ஒரு முறை கையினால் லேசாகக் கசக்கி முக்கோணமாக மடித்து மெல்லிய துணி விரிக்கப் பட்டுள்ள பெட்டியில் மூடி வைக்கவும்.
9. விருப்பமானால் மடிப்பதற்கு முன் ஒரு பக்கம் சிறிது நெய் தடவலாம்.

[கலோரி அளவு: 1 புல்கா- 73 கலோரி

கிடைக்கும் அளவு: 14 சப்பாத்திகள்]


**************************************************

காலிப்ளவர் சப்பாத்தி[Cauliflower Chapati]

உள்ளே நிறப்பும் மசாலாவுக்குத் தேவையான பொருட்கள்:

*காலிப்ளவர் - 1 சிறியது
*வெங்காயம் - 1
*பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை - 2 லேபிள் ஸ்பூன்
*பொடி உப்பு - 1 டீஸ்பூன்
*கரம் மசாலாப் பொடி - 1/4 டீஸ்பூன்
*தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*சர்க்கரை - 1 டீஸ்பூன்
*வெண்ணைய் - 2 டேபிள் ஸ்பூன்
*மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

1. காலிப்ளவரைக் கழுவி 1 மணி நேரம் உப்பு சேர்த்த தண்ணீரில் ஊற வக்கவும்.
2. பிறகு நன்றாகக் கழுவி முழு பூவை கையில் வைத்துக் கொண்டு ஸ்டீல் துருவி உபயோகப்படுத்தி பொடியாக துறுவவும்.
3. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
4. வாணலியில் வெண்ணையைச் சூடாக்கி சீரகம் போட்டு தாளிக்கவும்.
5. துருவிய காளிப்ளவர் சேர்த்து நல்ல அனலில் பச்சை வாசனைப் போகும்வரை கிளரிவிட்டு வதக்கவும்.

"ஸ்டப் சப்பாத்தி" செய்யும் முறை:


1. ஓர் உருண்டையை எடுத்து 3 அங்க்குல அகலமுள்ள சப்பாத்தியாக இடவும். மற்றோன்று அதே அளவில் செய்யவும்.
2. ஒரு சப்பாத்தியின் நடுவில் ஒரு டேபிள் ஸ்பூன் மசாலாவை சுற்றிலும் 1/4 அங்குல இடைவெளி இருக்கும்படி பரப்பவும்.
3. மற்றோரு சப்பாத்தியை அதன் மீது வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி ஒன்றோடு ஒன்றை ஒட்டி விடவும்.
4. மாவில் புரட்டி எடுத்து பெரிய கனமான சப்பாத்தியாக கவனமாக இடவும்.
5. சூடான தோசைக்கல்லில் இவ்வொரு பக்கத்திற்கும் 1/4 டீஸ்பூன் எண்ணைய் விட்டுச் சுடவும்.
6. "ஸ்டப் காலிப்ளவர் சப்பாத்தி" சூடாகப் பரிமாறவும்.

[மொத்த கலோரி மதிப்பு: 355 கலோரிகள்]

****************************************************************

வெந்தய ரொட்டி [Methi Roti]

தேவையான பொருட்கள்:

*கோதுமை மாவு - 2 கப்
*வெந்தய கீரை - 2 கட்டு
[இலைகளை மைடும் அரியவும்]
*பொடி உப்பு - 1 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
*எண்ணைய் - 2 டேபிள் ஸ்பூன்
[மாவுக்கு]
*தனியத்தூள் - 1 டீஸ்பூன்
*மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
*சீரகம் [அ] ஓமம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1. எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும்.
2. தேவையான் தண்ணீர் தெளித்து, மிருதுவான மாவாகப் பிசையவும்.
3. சுமாரான கனமுள்ள சப்பாத்திகள் தயாரிக்கவும்.
4, சூடான தோசைக்கல்லின் மேலே சப்பாத்தியைப் போட்டு இருபுறமும் 1/2 டீஸ்பூன் எண்ணைய் விட்டுச் சுடவும்.

குறிப்பு:

வெந்தயக் கீரையை அரிந்தவுடன் கசப்பேறுமுன் உடனே மாவுடன் கலக்கவும். வெந்தய கீரை பரோட்டா தயாரிக்க மாவைக் கலக்கும் போது எண்ணைய் அதிகமாக விடவும். ரொட்டியை விட பரோட்டாவை கனமாக இடவும்.


[கிடைக்கும் அளவு: 12 ரொட்டிகள்]
 கலோரி அளவு: 1 ரொட்டி - 112 கலோரி]


*****************************************************
 
நான் [ Naan]

தேவையான பொருட்கள்:

*மைதா - 500 கிராம்
*புளிக்காத கெட்டித் தயிர் - 1/2 கப்
*வெதுவெதுப்பான பால் - 1/2 கப்
*உலர்ந்த ஈஸ்ட் - 3/4 டீஸ்பூன்
*சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
*பொடி உப்பு - 1 1/4 டீஸ்பூன்
*பேக்கிங் பௌடர் - 3/4 டீஸ்பூன்
*சமயல் சோடா - 3/4 டீஸ்பூன்
*உருகிய நெய் [அ] வெண்ணைய் - 4 டீஸ்பூன்

செய்முறை:

1. மைதாவோடு உப்பு, பேக்கிங் பௌடர், சோடா இவற்றை சேர்த்து மும்முறை சலிக்கவும்.
2. ஈஸ்டை வெது வெதுப்பான பாலில் கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
3. சலித்த மாவை ஒரு அகலப் பாத்திரத்திலிட்டு, நடுவில் ஒரு குழி செய்யவும்.
4. ஈஸ்ட் கரைந்த பால், தயிர், சர்க்கரை இவற்றை அந்த குழியில் ஊற்றவும்.
5. ஒரு நிமிடம் கழித்து, உருகிய நெய் சேர்த்து மாவை நன்றாகக் கலக்கவும்.
6. பிசையும் பொழுது தேவைப்பட்டால் வெந்நீர் தெளித்து தளர்த்தியான மாவாகப் பிசையவும்.
7. ஒரு அகலமான் பேஸினில் சிறிது எண்ணைய் தடவி, மாவை அதில் போட்டு மேலே மெல்லிய ஈரத்துணிக் கொண்டு மூடி, அதன் மேலே ஒரு தட்டு வைத்து மூடவும். மாவு பொங்கி வர இடைவேளி இருக்குமாறு வைக்கவும். 5 [அ] 6 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு பிரட் மாவு போல பொங்கி இருக்கும். சிறிது பெரிய உருண்டைகள் செய்யவும்.
8. உருட்டுக் கட்டையால் 1/4 அங்குல தடிமனாக வட்டமாக உருட்டவும்.
9. ஒரு நுணியை கையால் இழுத்து பூசினி விதை போன்ற வடிவமாக்கவும்.
10. அதன் மேல் பக்கம் சிறிது தண்ணீர் தடவி, சூடான பாலின் மேல் [ Flat pan with handle] தண்ணீர் தடவிய பக்கம் ஒட்டும்படி போடவும்.
11. மிதமான அளவில் வைத்து மேலே மூடியால் மூடவும்.
12. மூடியைத் திறந்தால், நான் [ Naan] உப்பி வந்திருக்கும். பானின் பிடியைப் பிடித்து, தலைகீழாகத் திருப்பி நேரிடை அனலில் காட்டி மற்றொரு பக்கத்தை பொன்னிறமாக சுடவும்.
13. சிறிது வெண்ணைய் தடவி சூடாகப் பரிமாறவும்.


[கலோரி அளவு: 1 நான் [ Naan] - 136 கலோரி
கிடக்கும் அளவு: 15 சுமாரான அளவுள்ள நான் [Naan] தயாரிக்கலாம்]

*************************************************
 
பரோட்டா[Parotta]

தேவையான பொருட்கள்:

*மைதா - 4 கப் [குவித்து]
*பேகிங் பௌடர் - 1/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
*சமயல் சோடா - 3 சிட்டிகை
*பொடி உப்பு - 1 1/2 டீஸ்பூன்
*எண்ணைய் - 1/2 கப்

செய்முறை:

1. மைதாவோடு, பேக்கிங் பௌடர், உப்பு, சோடா இவற்றைச் சேர்த்து இருமுறை சலிக்கவும்.
2. மாவோடு,  2 முதல் 3 டீஸ்பூன் எண்ணைய், சர்க்கரை, இவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
3. போதுமான தண்ணீர் விட்டு, மிருதுவான, தளர்த்தியான மாவாகப் பிசையவும்.
4. ஒரு எண்ணைய் தடவிய கல்லின் மேல் மாவை பல நிமிடங்கள் அடித்து நன்றாக பிசையவும்.
5. பிசைத்த மாவை ஒரு கிண்ணத்தில் போட்டுமாவின் மேல் பக்கம் எண்ணைய் விட்டு 5 லிருந்து 6 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.
6. கல்லின் மேல் மாவை, இன்னொரு முறை அடித்து பிசையவும்.
7. ஆரஞ்சு அளவுள்ள உருண்டைகளாகச் செய்யவும்.
8. எண்ணைய் தடவிய கல்லின் மேல் ஓர் உருண்டையை வைத்து கையினால் அதை மெல்லிய வட்டமாகத் தட்டிப் பரப்பவும்.
9. மேலே சிறிது எண்ணைய் தடவி, சிறிது மைதா தூவி, கொசவம் போல்[pleats] மடித்து வந்து நடுவில் ஒன்றாக சேர்க்கவும்.
10. இரு முனைகளிலிருந்து சுருட்டினால் நடுவில் இரு உருண்டைகள் வரும்படி சுருட்டவும்.
11. ஒன்றின் மீது ஒன்று வத்து மெதுவாக தட்டையாக்கவும்.
12. எல்லா உருண்டைகளையும் இவ்வாறே செய்து அதே எண்ணையில் முழக்கி வைக்கவும்.
13. சுடுவதற்கு முன், உருண்டையை லேசாகத் தட்டி கனமான பரோட்டாவாக கையினால் தட்டவும்.
14. சுமாரான அளவில்தோசைக்கல் வைத்து பரோட்டாவுக்கு இருபுறமும் எண்ணைய் விட்டுச் சுடவும்.
15. அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு துணியால் பக்கங்களை அழுத்தி, பின், தளர்த்தி சூடாகப் பரிமாறவும்.


[கிடைக்கும் அளவு:- 20 பரோட்டாக்கள்
கலோரி அளவு: 1 பரோட்டா = 133 கலோரி]


*********************************************

வெந்தயக் கீரை இஞ்சி ரொட்டி[ Methi Ginger Roti]

தேவையான பொருட்கள்:

*கோதுமை மாவு - 1 1/2 கப்
*அரிசி மாவு - 3/4 கப்
*சிரோட்டி ரவை - 1/2 கப்
*பொட்டுக் கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
*பொடியாக அரிந்த வெங்காயம் - 1 1/2 கப்
*பொடியாக நறுக்கிய வெந்திய கீரை - 1/2 கப்
*பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
*இஞ்சி - 1/4 அங்குலத் துண்டு

செய்முறை


1. உலர்ந்த பொருட்களையெல்லாம் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணைய் விட்டு கலக்கவும்.
2. சிறிது தண்ணீர் விட்டு இஞ்சியை அரைத்து வ்டிகட்டி விடவும்.
3. இந்த இஞ்சி சாற்றையும், கீரை, மிளகாய் விழுது மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
4. திட்டமான தண்ணீர் விட்டு கெட்டியான மாவாகப் பிசையவும்.
5. சிறிய உருண்டைகளாகச் செய்து ஓர் ஈரத்துணியைப் பரப்பி அதன் மேலே உருண்டையை ரொட்டிகளாகத் தட்டவும்.
6. தோசைக் கல்லை காய வைத்து தேவையான எண்ணைய் விட்டு இருபுறமும் சிவக்க சுடவும்.
7. சூடாகப் பரிமாறவும்.

[கிடைக்கும் அளவு: 18 ரொட்டிகள்

கலோரி அளவு: 1 ரொட்டி = 94 கலோரி
[எண்ணைய் இல்லாமல்]

******************************************************

காக்ரா [Khakra ]

தேவையான பொருட்கள்


*கோதுமை மாவு - 2 கப்
*பொடி உப்பு - 3/4 டீஸ்பூன்
*தண்ணீர் - மாவை பிசைவதற்கு
தேவையான அளவு


செய்முறை:



1. தேவையான அளவு தண்ணீர் விட்டு, மாவை கெட்டியாகப் பிசையவும்.
2. பல நிமிடங்கள் நன்றாகப் பிசையவும்.
3. 16 உருண்டைகளாக உருட்டி ஒவ்வொன்றையும் மிக மெல்லிய சப்பாத்தியாக இடவும்.
4. ஒரு மெல்லிய தோசைக்கல் வைத்து சப்பாத்தியின் இருபுறமும் சிறிது நெய் தடவி, சிறிது பொன்னிறமாக சுடவும்.
5. எல்லா சப்பத்திகளையும் அவ்வாறே சுட்டு வைக்கவும்.
6. ஒரு தடிப்பான தோசைக் கல்லை அடுப்பில் வைக்கவும்.
7. கல் சூடானதும், தயாரித்த சப்பாத்தியை மேலேயிட்டு மெல்லிய துணியை உருட்டி ஒரே சீராக சப்பாத்தியின் மேல் அழுத்தவும். அதே நேரத்தில், சப்பாத்தி பழுப்பு நிறமாகும் வரை சுற்றி சுற்றி உருட்டவும்.
8. திருப்பிப் போட்டு சப்பாத்தி முறுகலாகும் வரை அதே போல் சுடவும்.


மாற்று செய்முறை:



மசாலா காக்ரா செய்ய மாவுடன் மஞ்சள் தூள், ஓமம், மிளகாய் தூள் சேர்கவும்.


குறிப்பு:


இவ்வகை சப்பாத்திகள் முறுக்கு போல முறுகலாக இருக்கும். ஒரு மாதம் வரை கெடாது. சப்பாத்தியை சுடும் போது பல தடவை திருப்பிப் போடக் கூடாது. ஒரே தடவை தான் திருப்ப வேண்டும். இல்லாவிடில்,  சப்பாத்தி உடைந்து விடும்.


[கிடைக்கும் அளவு - 16 காக்ரா

கலோரி அளவு: 1 காக்ரா = 78 கலோரி -
நெய்யும் சேர்த்து]

************************************************************

பட்டூரா [Bhatura]

தேவையான பொருட்கள்

*மைதா - 2 கப் [குவித்து]
*புளிக்காத கெட்டித் தயிர் - 1/2 கப்
*பால் - 1/4 கப்
*எண்ணைய் - 1 1/2 டீஸ்பூன்[மாவுக்கு]
*சமயல் சோடா - 3 சிட்டிகை
*உப்பு - 3/4 டீஸ்பூன்

செய்முறை

1. மாவு. உப்பு, சோடா. எண்ணைய் இவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும்.
2. தயிர், பால் சேர்த்து நன்றாகப் பிசையவும். [தேவையானால் பிசையும் போது இன்னும் பால் சேர்த்துக் கொள்ளவும்]
3. மூன்று மணி நேரம் மூடி வைக்கவும்.
4. மைதா மாவில் புரட்டி வழக்கமான பூரியை விட சற்று கனமாக பெரிய சப்பாத்தி போல் இடவும்.
5. பெரிய வாணலியில் எண்ணைய் காயவைத்து ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகப் பொரிக்கவும்.
6. கொண்டைக் கடலை மசாலாவோடு சூடாகப் பரிமாறவும்.


[கிடைக்கும் அளவு: 8 பட்டூராக்கள்

கலோரி மதிப்பு: 1 படூரா = 185 கலோரி]

**********************************************************

பூரி [Plain Puri]



பூரி
தேவையான பொருட்கள்

*கோதுமை மாவு - 2 கப் [குவித்து]
*உப்பு - 1/4 டீஸ்பூன்
*சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
*நெய் [அ] வனஸ்பதி] - 1 டீஸ்பூன்
*பேகிங் பௌடர் - 1/4 டீஸ்பூன்
*மாவைப் பிசைவதற்குத் தேவையான தண்ணீர் [அ] பால்
*எண்ணைய் - பூரி பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை

1
. மாவு, உப்பு, பேக்கிங் பௌடர் இவற்றை சலிக்கவும்.
2. சர்க்கரை, நெய், மாவு இவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும்.
3. கொஞ்சம் கொஞ்சமாகப் பால் [அ] தண்ணீர் விட்டு மாவை மிருதுவாகப் பிசையவும்.
4. 1 [அ] 2 மணி நேரம் மூடி வைக்கவும்.
5. சிறு உருண்டைகளாக செய்து பூரி இடவும்.
6. வாணலியில் எண்ணைய் காய வைத்து ஒவ்வொன்றாகப் பொரிக்கவும்.

*குறிப்பு:

சிறிதளவு சர்க்கரை சேர்ப்பதால், பூரி நன்றாகப் பொங்கி வரும்.

*மாற்று பூரிகள் செய்முறை
1. கேரட் பூரி: காரட்டைத் துருவி சிறிது நேரம் ஆவியில் வேக வைக்கவும். விழுதாக அரைத்து மாவுடன் கலக்கவும்.
2. மிருதுவான பூரி தயாரிக்க கோதுமை மாவோடு, அரை கப் மைதா சேர்க்கவும்.
3. மசாலா பூரி: புளிப்புத் தயிர், சீரகம், காய்ந்த மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், அரிந்த மல்லித் தழை, இவற்றை மாவோடு சேர்த்துக் கலக்கவும்.
4. தக்காளி பூரி: வடிகட்டிய தக்காளி ஜூஸ், சீரகம், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், இவற்றை மைதாமாவு அல்லது கோதுமை மாவுடன் சேர்த்து மாவு பிசையவும்.
5. காரப் பூரி: மூன்று கப் கோதுமை மாவோடு, 2 டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் ரவை, உப்பு, மிளகாய்த் தூள், சிறிது ஓமம், நெய் இவற்றை சேர்த்து அளவான தண்ணீர் விட்டு, கெட்டியாக மாவு பிசைந்து, பூரி தயாரிக்கவும்.

 [கிடைக்கும் அளவு: 18 பூரிகள்
கலோரி அளவு: 1 பூரி = 80 கலோரி]

Friday, February 5, 2010

சாலட் வகைகள் [Salads Recipes]

உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை "ஆரோக்கிய உணவு".


ஆரோக்கியமான சில "சாலட்" உணவு வகைகள் இதோ உங்களுக்காக ......





1.  காய்கறி சாலட்[ Vegetable Salad]





தேவையான பொருட்கள்


  • கேரட்- 1
  • கோஸ் -1துண்டு
  • குடைமிளகாய் -1
  • பீன்ஸ் -5
  • குக்கும்பர் -1
  • மிளகுதூள் -1 ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணை -1ஸ்பூன்
  • எலுமிச்சம்பழம் -1ல் பாதி

செய்யும் முறை

1.  காய்களை சுத்தம்செய்து தீக்குச்சிபோல் மெல்லியதாக நறுக்கவும்.

2.  குக்கும்பரையும் அதேபோல் நறுக்கி தனியாக வைக்கவும்.

3.  வாணலியில் எண்ணைவிட்டு நறுக்கிய காய்களை போட்டு சிறுதீயில் வதக்கவும்.காய்கள் பாதிவெந்தால் போதும்.

4.  உப்பு,மிளகுதூள் தூவி நறுக்கிய குக்கும்பரையும் போட்டு பிரட்டி இறக்கிவைத்து எலிமிச்சம்பழம் பிழியவும்.

5.  சுவையான காய்கறி சாலட் தயார்.

குறிப்பு:

சப்பாத்தி,  ரொட்டி[Bread], ரைஸுடன் [Rice] சாப்பிடலாம்.

******************************************************
 
2.  ஸ்பிரவுட்ஸ் சாலட்[Sprouts Salad]
 
 
 
 
தேவையான பொருட்கள்
 
  • பச்சை பயிறு (முளை கட்டியது) - 300 கிராம்
  • காரட் - 100 கிராம் துருவியது
  • வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது
  • தக்காளி -
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • மிளகு தூள் - 1 தேக்கரண்ட
  • மயோனைஸ் - 1/4 கப
  • உப்பு
செய்யும் முறை

1.  இட்லி பாத்திரத்தின் மேல் ஒரு துணியை கட்டி அதன் மேல் முளைத்த பயிறை பரப்பி 5 நிமிடம் வேக வைக்கவும்.

2.  வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

3.  தக்காளியை தோல் நீக்கி, விதை நீக்கி பொடியாக நறுக்கவும்.

4.  சீரகத்தை வறுத்து பொடியாக்கவும்.

5.  மயோனைஸுடன் சீரக தூள் கலந்து வைக்கவும்.

6.  பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து கிளரி, வேக வைத்து ஆர வைத்த முளைத்த பயிறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளரவும்.

7.  இத்துடன் மயோனைஸ் கலவையும் கலந்து பரிமாறவும்.

******************************************************

3.  கொண்டை கடலை சாலட்[ White Channa Salad]





தேவையான பொருட்கள் 
 
  • வெள்ளை கொண்டை கடலை - 1/4 கிலோ
  • கேரட் - 4 மேஜைக்கரண்டி [துருவியது]
  • வெங்காயம் - 3 [நீள வாக்கில் அரிந்தது]
  • தக்காளி - 3 [வட்ட வடிமாக அரிந்து நான்காக வெட்டிக் கொள்ளவும்]
  • எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  • வெள்ளரிக்காய் - 1 பொடியாக அரிந்து சேர்க்கவும்
  • உப்பு - தேவையான அளவு
  • மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
  • கொத்து மல்லி தழை - இரண்டு மேசை கரண்டி[பைனாக சாப்[chop]செய்தது]
  • எண்னை - 1 தேக்கரண்டி
  • சாட் மசாலா [ Chaat Masala] - 1 தேக்கரண்டி


செய்யும் முறை


1. கொண்டை கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து குக்கரில் குழையாமல் வெந்து எடுக்க வேண்டும்.


2. பிறகு ஒரு வானலியில் எண்ணை விட்டு வெங்காயத்தை லேசாக இரண்டு வதக்கு வதக்கி கொண்டை கடலை,உப்பு ஒரு தேக்கரண்டி, மிளகு தூள்,லெமென் ஜூஸ் கலக்கி இரக்கி விடவேன்டும்.


3. இப்போது கேரட்,வெள்ளரி,கொத்துமல்லி தழை,தக்காளி சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.


4. பிறகு, சாட் மசாலா [Chaat Masala] தூவி பரிமாறவும்.




குறிப்பு:

டயட்டில்[Diet] உள்ளவர்கள், மற்றவர்களும் விரும்பி சாப்பிடலாம்.


*****************************************************

4.  சைனீஸ் சாலட்[Chinese Salad]
 


 
 
தேவையான பொருட்கள்

  • தக்காளி- 4
  • கேரட் - 4
  • வெங்காயம் - 2
  • காப்சிகம் -4
  • வெள்ளரிக்காய் - 4
  • செச்வான் சாஸ் - தேவைக்கு.

செய்யும் முறை

1.  காய்கறிகளை சிறிய துண்டுகளாக (cubes) வெட்டிக் கொள்ளவும்.

2.  பவுலில்[Bowl] போட்டு செச்வான் சாஸ் சேர்த்து மிக்ஸ்செய்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

3.  செர்விங் ப்லேட்டில்[Serving Plate] லைம் கட் செய்து வைத்து அழகாக பரிமாறவும்.

குறிப்பு:

சாலட் சாப்பிடுபவர்கள் தினம் ஒரே மாதிரி இல்லாமல் வெரைட்டியாக செய்து சாப்பிடலாம்.
 
******************************************************
 
6.  ஃப்ரூட்ஸ்- நட்ஸ் சாலட்[Fruits & Nuts Salad]
 
 
 


தேவையானப் பொருட்கள்


  • பிடித்தமான பழ வகைகள் - 1 கிலோ
  • சர்க்கரை - 8 தேக்கரண்டி
  • பால் - 1 லிட்டர்
  • கஸ்டர்ட் பவுடர் [வெனிலா ஃப்ளேவர்] - 4 தேக்கரண்டி
  • முந்திரி - 10
  • பாதாம் - 10
  • பிஸ்தா - 1 கைப்பிடி
  • கிஸ்மிஸ் - 2  மேஜைக்கரண்டி
  • ஜாம் அல்லது ஜெல்லி - சிறிய கப்
  • மில்க் மெய்ட் - 1/4 கப்
ஆப்பிள், ஆரஞ்ச், பேரிக்காய், கொய்யா பழம், பிளம்ஸ், சாத்துக்குடி, வாழைப்பழம், மாதுளம்பழம் இது போன்ற விருப்பமான எல்லா பழவகைகளும் சேர்த்து  1 கிலோ அளவு எடுத்துக் கொள்ளவும்.

செய்யும் முறை


1.  குறிப்பிட்டுள்ள மற்ற அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2.  எல்லா பழவகைகளையும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

3.  ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.  

4.  1 லிட்டர் பாலுக்கு 4 தேக்கரண்டி கஸ்டர்ட் பவுடர் விதம் எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் கஸ்டர்ட் பவுடரை போட்டு 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

5.  பாலுடன் சர்க்கரை சேர்த்து கலந்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் கரைத்து வைத்திருக்கும் கஸ்டர்ட் பவுடரை ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். தாமதித்தால் கட்டி விழுந்துவிடும். பால் கெட்டியான பதமானதும் இறக்கி வைக்கவும்.

6.  பரிமாற போகும் கிண்ணத்தில் நறுக்கின பழக்கலவையை வைக்கவும். அதன் மேல் முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் மற்றும் பிஸ்தாக்களை தூவவும்.

7.  நட்ஸ் தூவிய பின்னர் மில்க் மெயிட் மற்றும் கஸ்டர்ட் கலவையை பரவலாக ஊற்றவும். அதன் மேல் ஜாம் அல்லது ஜெல்லியை வைத்து அலங்கரிக்கவும். ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று ஆனதும் எடுத்து பரிமாறவும்.
 
8.  சுவையான ப்ரூட்ஸ், நட்ஸ் சாலட் தயார்.


*********************************************************

7.  முட்டைகோஸ் சாலட்[Red Cabbage Salad]




தேவையான பொருட்கள்

  • சிவப்பு முட்டைகோஸ் - 400 கிராம்
  • அன்னாசிப் பழம் - 1
  • செலரித்துண்டுகள் - 4
  • சாலட் கிரீம் - 1 1/2 கப்
செய்யும் முறை


1.  முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.

2.  அன்னாசிப் பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து பிழிந்து சக்கையை நீக்கி விட்டு வடிக்கட்டி சாறு எடுத்துக் கொள்ளவும்.

3.  செலரித் துண்டுகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4.  ஒரு பாத்திரத்தில் முட்டைக்கோஸ், செலரித் துண்டுகள்[Celery], அன்னாசி பழச்சாறு, உப்பு, மற்றும் சாலட் கிரீம் சேர்த்து கலந்து ஃப்ரிஜில் குளிர வைக்கவும்.

5.  சிறிது நேரம் கழித்து எடுத்து பரிமாறவும்.சுவைக்க ருசியாக இருக்கும்.
*****************************************************

Thursday, February 4, 2010

சூப் வகைகள்

சூப் ஒரு மெயின் உணவு கிடையாது.  ஆனால், பசியைத் தூண்டுகிற அபிடைஸர். அதாவது, சூப்பைக் குடித்த பின்பு தான், மற்ற உணவுகளை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். சில வகை சூப்பில், பூண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பூண்டு உபயோகிக்க விரும்பாதவர்கள் அதனைத் தவிர்க்கலாம். அதேமாதிரி, பெரும்பாலான சூப்களில், மிளகுதூள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், தேவை படறவர்கள்,  இதனை தனியாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.


சூடான சூப் வயிற்றுக்கு நல்லது.  இதோ, வெரைட்டியான சூப்களைச் செய்து "சூப்பராக" கொண்டாடுங்கள்!


1.  ஸ்வீட் கார்ன் சூப்  [ Sweet Corn Soup ]



தேவையான பொருட்கள்:

பதப்படுத்தப்பட்ட சோளம் [ டிண்ட் கான் - Tinned Corn ] : 1 டப்பா

வெஜிடபிள் ஸ்டாக் [ Vegetable Stock ] : 1 லிட்டர்
வெண்ணைய் : 1 மேஜைக்கரண்டி
பால் : 1 கோப்பை
தேவையானால்] முட்டை : 1
அஜினோ மோட்டோ [Aji-No-Moto] : 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் : 1 தேக்கரண்டி
மைதா மாவு : 1 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு


செய்யும் முறை:

1. வெண்ணையை அடுப்பில் வைத்து உருக்கிக்கொள்ளவும்.  வெண்ணைய் உருகியவுடன், மைதா மாவு சேர்த்து 1 நிமிடம் வரை வறுக்கவும்.  பால் சேர்க்கவும்.

2. டப்பியில் உள்ள மக்காச் சோளத்தையும், வெஜிடபிள் ஸ்டாக்கையும் [ காய்கறி வேகவைத்த தண்ணீர் ] சேர்க்கவும்.

3. உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

4. சூப் இரண்டு கொதி வந்தவுடன் தேவையானால் முட்டை சேர்க்கவும். முட்டையை உடைத்து மெதுவாக விடவும்.

5. சூப்பை சுமார் 10 நிமிடம்வரை கொதிக்க விடவும்.  அஜினோ மோட்டொவைச் சேர்க்கவும்.

6. சூப்பை வடிகட்டாமல் சூடாகப் பரிமாறவும்.  தேவையானால் க்ரீம் [Cream] சேர்த்துப் பரிமாறவும்.

*********************************************************************


2.  மிளகு தண்ணீர் சூப் [Pepper Soup]







தேவையான பொருட்கள்:


வெஜிடபிள் ஸ்டாக் - 1 லிட்டர்
தக்காளிப் பழம் - 4
பெரிய வெங்காயம் - 1
தனியாப்பொடி - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகப்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
வெண்ணை - 2 மேஜைக் கரண்டி
மைதாமாவு - 1 தேக்கரண்டி
இஞ்சி சிறிய துண்டு
பூண்டு - 2 பல்




வெஜிடபிள் ஸ்டாக் [Vegetable Stock] தயாரிக்கத் தேவையானவை:


பீன்ஸ் - 100 கிராம்
காரட் - 2
முட்டைக்கோஸ் - 100 கிராம்


மற்ற ஆங்கிலக் காய்கறி வகைகளையும் உபயோகிக்கலாம். மேற்கூறிய காய்வகைகளைப்
பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 1 லிட்டர் தண்ணீர் விட்டுக் காய்கறித் துண்டுகளை வேக
வைக்கவும். வேகவைத்த தண்ணீரை எடுத்து வைக்கவும். இதுவே "வெஜிடபிள் ஸ்டாக்" என்பது.




செய்யும் முறை:




1. வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளிப்பழம் எல்லாவற்றையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


2. வெண்ணையை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைக்கவும்.




3. வெண்ணை உருகியவுடன் வெங்காயம், பூண்டு, இஞ்சி மூன்றையும் 2 அல்லது 3 நிமிடங்கள்வரை வதக்கவும்.


4. மைதாமாவைச் சேர்த்து 1 நிமிடம் கிளறவும். வெஜிடபிள் ஸ்டாக்கை [Vegetable stock] ஊற்றி நன்றாகக் கலந்து கொள்ளவும்.


5. மிளகுப்போடி, தனியாப்பொடி, உப்பு, சீரகப்பொடி முதலியவற்றைச் சேர்க்கவும். 5 நிமிடங்கள் வறை கொதிக்க விடவும்.


6. சூப்பை ஜல்லடையில் போட்டு வடிகட்டி எடுக்கவும்.

7.  வடிகட்டிய சூப்பில் தக்காளிப்பழத் துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.


8. சூப் பரிமாறும்போழுது கோப்பையில் 1/2 ஸ்பூன் வெண்ணைப் போட்டுப் பரிமாறலாம். க்ரீம் இருந்தாலும் சூப்பின்மேலே விட்டு சூடாகப் பரிமாறலாம்.


********************************************

3.  பட்டாணி சூப் [Green Peas Soup]





தேவையான பொருட்கள்:

பச்சைப் பட்டாணி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
[தேவையானால்] செலரித் தண்டு[ Celery Stick ]  - 2
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 அங்குலத் துண்டு
பூண்டு - 2 பல்
மைதாமாவு - 1 மேஜைக் கரண்டி
நெய் - 1 மேஜைக் கரண்டி
உப்பு தேவையான அளவு
க்ரீம் - 1/2 கோப்பை

செய்யும் முறை:

1. பச்சைப் பட்டாணியின் தோலை உரித்துக் கொள்ளவும். பட்டாணியை 1 1/2 லிட்டர் தண்ணீர்
விட்டு வேக வைக்கவும்.

2. பட்டாணி மிருதுவாக வெந்தவுடன், வேகவைத்த தண்ணீருடன் நன்றாக மசித்துக் கொள்ளவும்.

3. நெய் உருகியவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலியவற்றை வதக்கவும்.  தேவையானால் செலரித் தண்டு [ Celery stick ] இரண்டு சேர்த்துக் கொள்ளவும்.

4. மைதமாவு சேர்த்து 1 நிமிடம்வரை வதக்கவும்.

5. மசித்த பட்டாணியைஸ் சேர்த்து, 10 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். உப்பு, மிளகுத்தூள், அஜினோமோட்டோ [ AJI -No-Moto] சேர்க்கவும். வெந்த சூப்பை சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டவும்.

6. சூப்பின்மேல் க்ரீம் விட்டு சூடாகப் பரிமாறவும்.

***************************************************************
4.  காரட்- தக்காளி சூப் [Carrot-Tomato Soup]







தேவையான பொருட்கள்:
காரட் - 500 கிராம்
தக்காளிப் பழம் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1
வெண்ணைய் - 50 கிராம்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
சர்க்கரை - 1 தேக்கரண்டி
மைதமாவு - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கோப்பை


செய்யும் முறை:


1. தக்காளிப்பழத்தைக் கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடம் வரை போடவும். பின், தோலுரித்துப் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


2. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.


3. வாணலியில் வெண்ணையைப் போட்டு, நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடங்கள் வரை வெதக்கவும்.


4. பிறகு காரட் வில்லைகளைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். மைதாமாவைச் சேர்க்கவும்.


5. நறுக்கிய தக்காளித் துண்டுகள், மிளகுப்பொடி, உப்பு, சர்க்கரை, தண்ணீர் முதலியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.


6. சூப் வடிக்கட்டியின் மூலம் வெந்த காய்களை வடிக்கட்டவும்.

7. தேவையானால், மேலே 1 தேக்கரண்டி க்ரீம் [ Cream ] ஊற்றிப் பரிமாறவும்.

8. சூப்பைச் சூடாகப் பரிமாறவும்.

*******************************************************
5.  காபேஜ் சூப் [ Cabbage Soup]




தேவையான பொருட்கள்:


முட்டைகோஸ் - 200 கிராம்
சிறிய பூசிணிப் பத்தை - 1
பெரிய வெங்காயம் - 1
உருளைக்கிழங்கு 1
இஞ்சி சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தண்ணீர் - 2 கோப்பை


வொயிட் சாஸ் [ White Sauce] தயாரிக்கத் தேவையான் பொருட்கள்:

மைதாமாவு - 30 கிராம்
வெண்ணைய் - 30 கிராம்
பால் - 200 மில்லி லிட்டர்

வொயிட் சாஸ் தயாரிக்கும் முறை:

வெண்ணையை வாணலியில் வைத்து உருகவிடவும். வெண்ணைய் உருகியவுடன், மைதாமாவைச் சேர்த்து 1 நிமிடம் கிளறவும். பின்னர், பால் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.


செய்யும் முறை:

1. காய் வகைகளை நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய காய்களுடன் இஞ்சி, பூண்டு, உப்பு, மிளகுத்தூள் முதலியவற்றைச் சேர்த்து, 2 கோப்பைத் தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் வேக விடவும்.

3. காய்கள் வெந்தவுடன், சூப் வடிகட்டியின் மூலம் [ Soup Strainer] வடிகட்டிக் கொள்ளவும்.

4. வடிகட்டிய சூப்புடன் [ white Sauce] வொயிட் சாஸைச் சேர்க்கவும்.

5. சூப்பை சூடாகப் பரிமாறவும்.

**********************************************************************************************************************************

6. தக்காளி சூப் [Tomato Soup]





தேவையான பொருட்கள்:

தக்காளி - 1/2 கிலோ
சிறிய பீட்ரூட் - 1
காரட் - 1
பெரிய வெங்காயம் - 1
இஞ்சித் துண்டு -1
புதினா இலை ஒரு கைப்பிடி அளவு
செலரித் தண்டு [Celery] - 2
பூண்டு - 2 அல்லது 3 பல்
வெண்ணைய் - 30 கிராம்
மைதாமாவு - 1 மேஜைக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
ரொட்டித்தூண்டு - 3 [Bread Slices]

செலரித் தண்டு கிடைக்காவிட்டால் 4, 5 துளசி இலையை உபயோகிக்கலாம்.


செய்யும் முறை:

1. தக்காளிப்பழம், பீற்ரூட், காரட், வெங்காயம், இஞ்சி, செலரித் தண்டு [Celery] எல்லாவற்றையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் வெண்ணையை உருக வைத்துக் கொள்ளவும்.

3. வெண்ணைய் உருகியவுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி மூன்றையும் 2 அல்லது 3 நிமிடம் வரை வதக்கவும்.

4. பிறகு, நறுக்கிய காரட், பீட்ரூட், செலரி தண்டு, புதினா முதலியவற்றைப் போட்டு 2 நிமிடம் வரை வதக்கவும். பிறகு மைதாமாவையும் சேர்த்துக் கலக்கவும்.

5. நறுக்கிய தக்களிப் பழத்தைப் போட்டு, 3 கோப்பைத் தண்ணீர் விட்டு, உப்பு, மிளகுத்தூள், சர்க்கரை முதலியவற்றைப் போட்டு, பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். குக்கர் இல்லாவிட்டால், சாதாரணமான பாத்திரத்தில் வேகவைதுக் கொள்ளலாம்.

6. நங்கு வெந்தபின், சூப் வடிகட்டியின் [Soup Strainer] மூலமாகவோ, அல்லது வலை வடிகட்டி மூலமாகவோ வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

7. ரொட்டியை [ Bread] சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து வைத்துக் கொண்டு சூப் பரிமாறும் சமயம் போட்டுக் கொடுக்கவும்.

8. சூப்பை எப்போதும் சூடாகப் பரிமாறவும்.

********************************************************
Related Posts with Thumbnails