Thursday, February 4, 2010

சூப் வகைகள்

சூப் ஒரு மெயின் உணவு கிடையாது.  ஆனால், பசியைத் தூண்டுகிற அபிடைஸர். அதாவது, சூப்பைக் குடித்த பின்பு தான், மற்ற உணவுகளை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். சில வகை சூப்பில், பூண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பூண்டு உபயோகிக்க விரும்பாதவர்கள் அதனைத் தவிர்க்கலாம். அதேமாதிரி, பெரும்பாலான சூப்களில், மிளகுதூள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், தேவை படறவர்கள்,  இதனை தனியாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.


சூடான சூப் வயிற்றுக்கு நல்லது.  இதோ, வெரைட்டியான சூப்களைச் செய்து "சூப்பராக" கொண்டாடுங்கள்!


1.  ஸ்வீட் கார்ன் சூப்  [ Sweet Corn Soup ]



தேவையான பொருட்கள்:

பதப்படுத்தப்பட்ட சோளம் [ டிண்ட் கான் - Tinned Corn ] : 1 டப்பா

வெஜிடபிள் ஸ்டாக் [ Vegetable Stock ] : 1 லிட்டர்
வெண்ணைய் : 1 மேஜைக்கரண்டி
பால் : 1 கோப்பை
தேவையானால்] முட்டை : 1
அஜினோ மோட்டோ [Aji-No-Moto] : 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் : 1 தேக்கரண்டி
மைதா மாவு : 1 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு


செய்யும் முறை:

1. வெண்ணையை அடுப்பில் வைத்து உருக்கிக்கொள்ளவும்.  வெண்ணைய் உருகியவுடன், மைதா மாவு சேர்த்து 1 நிமிடம் வரை வறுக்கவும்.  பால் சேர்க்கவும்.

2. டப்பியில் உள்ள மக்காச் சோளத்தையும், வெஜிடபிள் ஸ்டாக்கையும் [ காய்கறி வேகவைத்த தண்ணீர் ] சேர்க்கவும்.

3. உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

4. சூப் இரண்டு கொதி வந்தவுடன் தேவையானால் முட்டை சேர்க்கவும். முட்டையை உடைத்து மெதுவாக விடவும்.

5. சூப்பை சுமார் 10 நிமிடம்வரை கொதிக்க விடவும்.  அஜினோ மோட்டொவைச் சேர்க்கவும்.

6. சூப்பை வடிகட்டாமல் சூடாகப் பரிமாறவும்.  தேவையானால் க்ரீம் [Cream] சேர்த்துப் பரிமாறவும்.

*********************************************************************


2.  மிளகு தண்ணீர் சூப் [Pepper Soup]







தேவையான பொருட்கள்:


வெஜிடபிள் ஸ்டாக் - 1 லிட்டர்
தக்காளிப் பழம் - 4
பெரிய வெங்காயம் - 1
தனியாப்பொடி - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகப்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
வெண்ணை - 2 மேஜைக் கரண்டி
மைதாமாவு - 1 தேக்கரண்டி
இஞ்சி சிறிய துண்டு
பூண்டு - 2 பல்




வெஜிடபிள் ஸ்டாக் [Vegetable Stock] தயாரிக்கத் தேவையானவை:


பீன்ஸ் - 100 கிராம்
காரட் - 2
முட்டைக்கோஸ் - 100 கிராம்


மற்ற ஆங்கிலக் காய்கறி வகைகளையும் உபயோகிக்கலாம். மேற்கூறிய காய்வகைகளைப்
பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 1 லிட்டர் தண்ணீர் விட்டுக் காய்கறித் துண்டுகளை வேக
வைக்கவும். வேகவைத்த தண்ணீரை எடுத்து வைக்கவும். இதுவே "வெஜிடபிள் ஸ்டாக்" என்பது.




செய்யும் முறை:




1. வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளிப்பழம் எல்லாவற்றையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


2. வெண்ணையை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைக்கவும்.




3. வெண்ணை உருகியவுடன் வெங்காயம், பூண்டு, இஞ்சி மூன்றையும் 2 அல்லது 3 நிமிடங்கள்வரை வதக்கவும்.


4. மைதாமாவைச் சேர்த்து 1 நிமிடம் கிளறவும். வெஜிடபிள் ஸ்டாக்கை [Vegetable stock] ஊற்றி நன்றாகக் கலந்து கொள்ளவும்.


5. மிளகுப்போடி, தனியாப்பொடி, உப்பு, சீரகப்பொடி முதலியவற்றைச் சேர்க்கவும். 5 நிமிடங்கள் வறை கொதிக்க விடவும்.


6. சூப்பை ஜல்லடையில் போட்டு வடிகட்டி எடுக்கவும்.

7.  வடிகட்டிய சூப்பில் தக்காளிப்பழத் துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.


8. சூப் பரிமாறும்போழுது கோப்பையில் 1/2 ஸ்பூன் வெண்ணைப் போட்டுப் பரிமாறலாம். க்ரீம் இருந்தாலும் சூப்பின்மேலே விட்டு சூடாகப் பரிமாறலாம்.


********************************************

3.  பட்டாணி சூப் [Green Peas Soup]





தேவையான பொருட்கள்:

பச்சைப் பட்டாணி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
[தேவையானால்] செலரித் தண்டு[ Celery Stick ]  - 2
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 அங்குலத் துண்டு
பூண்டு - 2 பல்
மைதாமாவு - 1 மேஜைக் கரண்டி
நெய் - 1 மேஜைக் கரண்டி
உப்பு தேவையான அளவு
க்ரீம் - 1/2 கோப்பை

செய்யும் முறை:

1. பச்சைப் பட்டாணியின் தோலை உரித்துக் கொள்ளவும். பட்டாணியை 1 1/2 லிட்டர் தண்ணீர்
விட்டு வேக வைக்கவும்.

2. பட்டாணி மிருதுவாக வெந்தவுடன், வேகவைத்த தண்ணீருடன் நன்றாக மசித்துக் கொள்ளவும்.

3. நெய் உருகியவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலியவற்றை வதக்கவும்.  தேவையானால் செலரித் தண்டு [ Celery stick ] இரண்டு சேர்த்துக் கொள்ளவும்.

4. மைதமாவு சேர்த்து 1 நிமிடம்வரை வதக்கவும்.

5. மசித்த பட்டாணியைஸ் சேர்த்து, 10 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். உப்பு, மிளகுத்தூள், அஜினோமோட்டோ [ AJI -No-Moto] சேர்க்கவும். வெந்த சூப்பை சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டவும்.

6. சூப்பின்மேல் க்ரீம் விட்டு சூடாகப் பரிமாறவும்.

***************************************************************
4.  காரட்- தக்காளி சூப் [Carrot-Tomato Soup]







தேவையான பொருட்கள்:
காரட் - 500 கிராம்
தக்காளிப் பழம் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1
வெண்ணைய் - 50 கிராம்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
சர்க்கரை - 1 தேக்கரண்டி
மைதமாவு - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கோப்பை


செய்யும் முறை:


1. தக்காளிப்பழத்தைக் கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடம் வரை போடவும். பின், தோலுரித்துப் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


2. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.


3. வாணலியில் வெண்ணையைப் போட்டு, நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடங்கள் வரை வெதக்கவும்.


4. பிறகு காரட் வில்லைகளைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். மைதாமாவைச் சேர்க்கவும்.


5. நறுக்கிய தக்காளித் துண்டுகள், மிளகுப்பொடி, உப்பு, சர்க்கரை, தண்ணீர் முதலியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.


6. சூப் வடிக்கட்டியின் மூலம் வெந்த காய்களை வடிக்கட்டவும்.

7. தேவையானால், மேலே 1 தேக்கரண்டி க்ரீம் [ Cream ] ஊற்றிப் பரிமாறவும்.

8. சூப்பைச் சூடாகப் பரிமாறவும்.

*******************************************************
5.  காபேஜ் சூப் [ Cabbage Soup]




தேவையான பொருட்கள்:


முட்டைகோஸ் - 200 கிராம்
சிறிய பூசிணிப் பத்தை - 1
பெரிய வெங்காயம் - 1
உருளைக்கிழங்கு 1
இஞ்சி சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தண்ணீர் - 2 கோப்பை


வொயிட் சாஸ் [ White Sauce] தயாரிக்கத் தேவையான் பொருட்கள்:

மைதாமாவு - 30 கிராம்
வெண்ணைய் - 30 கிராம்
பால் - 200 மில்லி லிட்டர்

வொயிட் சாஸ் தயாரிக்கும் முறை:

வெண்ணையை வாணலியில் வைத்து உருகவிடவும். வெண்ணைய் உருகியவுடன், மைதாமாவைச் சேர்த்து 1 நிமிடம் கிளறவும். பின்னர், பால் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.


செய்யும் முறை:

1. காய் வகைகளை நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய காய்களுடன் இஞ்சி, பூண்டு, உப்பு, மிளகுத்தூள் முதலியவற்றைச் சேர்த்து, 2 கோப்பைத் தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் வேக விடவும்.

3. காய்கள் வெந்தவுடன், சூப் வடிகட்டியின் மூலம் [ Soup Strainer] வடிகட்டிக் கொள்ளவும்.

4. வடிகட்டிய சூப்புடன் [ white Sauce] வொயிட் சாஸைச் சேர்க்கவும்.

5. சூப்பை சூடாகப் பரிமாறவும்.

**********************************************************************************************************************************

6. தக்காளி சூப் [Tomato Soup]





தேவையான பொருட்கள்:

தக்காளி - 1/2 கிலோ
சிறிய பீட்ரூட் - 1
காரட் - 1
பெரிய வெங்காயம் - 1
இஞ்சித் துண்டு -1
புதினா இலை ஒரு கைப்பிடி அளவு
செலரித் தண்டு [Celery] - 2
பூண்டு - 2 அல்லது 3 பல்
வெண்ணைய் - 30 கிராம்
மைதாமாவு - 1 மேஜைக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
ரொட்டித்தூண்டு - 3 [Bread Slices]

செலரித் தண்டு கிடைக்காவிட்டால் 4, 5 துளசி இலையை உபயோகிக்கலாம்.


செய்யும் முறை:

1. தக்காளிப்பழம், பீற்ரூட், காரட், வெங்காயம், இஞ்சி, செலரித் தண்டு [Celery] எல்லாவற்றையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் வெண்ணையை உருக வைத்துக் கொள்ளவும்.

3. வெண்ணைய் உருகியவுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி மூன்றையும் 2 அல்லது 3 நிமிடம் வரை வதக்கவும்.

4. பிறகு, நறுக்கிய காரட், பீட்ரூட், செலரி தண்டு, புதினா முதலியவற்றைப் போட்டு 2 நிமிடம் வரை வதக்கவும். பிறகு மைதாமாவையும் சேர்த்துக் கலக்கவும்.

5. நறுக்கிய தக்களிப் பழத்தைப் போட்டு, 3 கோப்பைத் தண்ணீர் விட்டு, உப்பு, மிளகுத்தூள், சர்க்கரை முதலியவற்றைப் போட்டு, பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். குக்கர் இல்லாவிட்டால், சாதாரணமான பாத்திரத்தில் வேகவைதுக் கொள்ளலாம்.

6. நங்கு வெந்தபின், சூப் வடிகட்டியின் [Soup Strainer] மூலமாகவோ, அல்லது வலை வடிகட்டி மூலமாகவோ வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

7. ரொட்டியை [ Bread] சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து வைத்துக் கொண்டு சூப் பரிமாறும் சமயம் போட்டுக் கொடுக்கவும்.

8. சூப்பை எப்போதும் சூடாகப் பரிமாறவும்.

********************************************************

3 comments:

push said...


Excellent information.. Very interesting post, thanks for sharing!

Ranjani Narayanan said...

வலைச்சர அறிமுகத்திற்கு பாராட்டுக்கள்!
சூப் வகைகள் எல்லாமே செய்முறை விளக்கங்களுடன் நன்றாக இருக்கின்றன. புகைப்படங்கள் அருமை!

Vetirmagal said...

well illustrated and presented. Thanks for sharing.

Related Posts with Thumbnails