ஆரோக்கியமான சில "சாலட்" உணவு வகைகள் இதோ உங்களுக்காக ......
1. காய்கறி சாலட்[ Vegetable Salad]
தேவையான பொருட்கள்
- கேரட்- 1
- கோஸ் -1துண்டு
- குடைமிளகாய் -1
- பீன்ஸ் -5
- குக்கும்பர் -1
- மிளகுதூள் -1 ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- எண்ணை -1ஸ்பூன்
- எலுமிச்சம்பழம் -1ல் பாதி
செய்யும் முறை
1. காய்களை சுத்தம்செய்து தீக்குச்சிபோல் மெல்லியதாக நறுக்கவும்.
2. குக்கும்பரையும் அதேபோல் நறுக்கி தனியாக வைக்கவும்.
3. வாணலியில் எண்ணைவிட்டு நறுக்கிய காய்களை போட்டு சிறுதீயில் வதக்கவும்.காய்கள் பாதிவெந்தால் போதும்.
4. உப்பு,மிளகுதூள் தூவி நறுக்கிய குக்கும்பரையும் போட்டு பிரட்டி இறக்கிவைத்து எலிமிச்சம்பழம் பிழியவும்.
5. சுவையான காய்கறி சாலட் தயார்.
குறிப்பு:
சப்பாத்தி, ரொட்டி[Bread], ரைஸுடன் [Rice] சாப்பிடலாம்.
******************************************************
2. ஸ்பிரவுட்ஸ் சாலட்[Sprouts Salad]
தேவையான பொருட்கள்
- பச்சை பயிறு (முளை கட்டியது) - 300 கிராம்
- காரட் - 100 கிராம் துருவியது
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது
- தக்காளி -
- சீரகம் - 1 தேக்கரண்டி
- மிளகு தூள் - 1 தேக்கரண்ட
- மயோனைஸ் - 1/4 கப
- உப்பு
1. இட்லி பாத்திரத்தின் மேல் ஒரு துணியை கட்டி அதன் மேல் முளைத்த பயிறை பரப்பி 5 நிமிடம் வேக வைக்கவும்.
2. வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
3. தக்காளியை தோல் நீக்கி, விதை நீக்கி பொடியாக நறுக்கவும்.
4. சீரகத்தை வறுத்து பொடியாக்கவும்.
5. மயோனைஸுடன் சீரக தூள் கலந்து வைக்கவும்.
6. பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து கிளரி, வேக வைத்து ஆர வைத்த முளைத்த பயிறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளரவும்.
7. இத்துடன் மயோனைஸ் கலவையும் கலந்து பரிமாறவும்.
******************************************************
3. கொண்டை கடலை சாலட்[ White Channa Salad]
தேவையான பொருட்கள்
- வெள்ளை கொண்டை கடலை - 1/4 கிலோ
- கேரட் - 4 மேஜைக்கரண்டி [துருவியது]
- வெங்காயம் - 3 [நீள வாக்கில் அரிந்தது]
- தக்காளி - 3 [வட்ட வடிமாக அரிந்து நான்காக வெட்டிக் கொள்ளவும்]
- எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
- வெள்ளரிக்காய் - 1 பொடியாக அரிந்து சேர்க்கவும்
- உப்பு - தேவையான அளவு
- மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
- கொத்து மல்லி தழை - இரண்டு மேசை கரண்டி[பைனாக சாப்[chop]செய்தது]
- எண்னை - 1 தேக்கரண்டி
- சாட் மசாலா [ Chaat Masala] - 1 தேக்கரண்டி
செய்யும் முறை
1. கொண்டை கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து குக்கரில் குழையாமல் வெந்து எடுக்க வேண்டும்.
2. பிறகு ஒரு வானலியில் எண்ணை விட்டு வெங்காயத்தை லேசாக இரண்டு வதக்கு வதக்கி கொண்டை கடலை,உப்பு ஒரு தேக்கரண்டி, மிளகு தூள்,லெமென் ஜூஸ் கலக்கி இரக்கி விடவேன்டும்.
3. இப்போது கேரட்,வெள்ளரி,கொத்துமல்லி தழை,தக்காளி சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
4. பிறகு, சாட் மசாலா [Chaat Masala] தூவி பரிமாறவும்.
குறிப்பு:
டயட்டில்[Diet] உள்ளவர்கள், மற்றவர்களும் விரும்பி சாப்பிடலாம்.
*****************************************************
4. சைனீஸ் சாலட்[Chinese Salad]
தேவையான பொருட்கள்
- தக்காளி- 4
- கேரட் - 4
- வெங்காயம் - 2
- காப்சிகம் -4
- வெள்ளரிக்காய் - 4
- செச்வான் சாஸ் - தேவைக்கு.
செய்யும் முறை
1. காய்கறிகளை சிறிய துண்டுகளாக (cubes) வெட்டிக் கொள்ளவும்.
2. பவுலில்[Bowl] போட்டு செச்வான் சாஸ் சேர்த்து மிக்ஸ்செய்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
3. செர்விங் ப்லேட்டில்[Serving Plate] லைம் கட் செய்து வைத்து அழகாக பரிமாறவும்.
குறிப்பு:
சாலட் சாப்பிடுபவர்கள் தினம் ஒரே மாதிரி இல்லாமல் வெரைட்டியாக செய்து சாப்பிடலாம்.
******************************************************
6. ஃப்ரூட்ஸ்- நட்ஸ் சாலட்[Fruits & Nuts Salad]
தேவையானப் பொருட்கள்
- பிடித்தமான பழ வகைகள் - 1 கிலோ
- சர்க்கரை - 8 தேக்கரண்டி
- பால் - 1 லிட்டர்
- கஸ்டர்ட் பவுடர் [வெனிலா ஃப்ளேவர்] - 4 தேக்கரண்டி
- முந்திரி - 10
- பாதாம் - 10
- பிஸ்தா - 1 கைப்பிடி
- கிஸ்மிஸ் - 2 மேஜைக்கரண்டி
- ஜாம் அல்லது ஜெல்லி - சிறிய கப்
- மில்க் மெய்ட் - 1/4 கப்
செய்யும் முறை
1. குறிப்பிட்டுள்ள மற்ற அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. எல்லா பழவகைகளையும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
4. 1 லிட்டர் பாலுக்கு 4 தேக்கரண்டி கஸ்டர்ட் பவுடர் விதம் எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் கஸ்டர்ட் பவுடரை போட்டு 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
5. பாலுடன் சர்க்கரை சேர்த்து கலந்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் கரைத்து வைத்திருக்கும் கஸ்டர்ட் பவுடரை ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். தாமதித்தால் கட்டி விழுந்துவிடும். பால் கெட்டியான பதமானதும் இறக்கி வைக்கவும்.
6. பரிமாற போகும் கிண்ணத்தில் நறுக்கின பழக்கலவையை வைக்கவும். அதன் மேல் முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் மற்றும் பிஸ்தாக்களை தூவவும்.
7. நட்ஸ் தூவிய பின்னர் மில்க் மெயிட் மற்றும் கஸ்டர்ட் கலவையை பரவலாக ஊற்றவும். அதன் மேல் ஜாம் அல்லது ஜெல்லியை வைத்து அலங்கரிக்கவும். ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று ஆனதும் எடுத்து பரிமாறவும்.
8. சுவையான ப்ரூட்ஸ், நட்ஸ் சாலட் தயார்.
*********************************************************
7. முட்டைகோஸ் சாலட்[Red Cabbage Salad]
தேவையான பொருட்கள்
- சிவப்பு முட்டைகோஸ் - 400 கிராம்
- அன்னாசிப் பழம் - 1
- செலரித்துண்டுகள் - 4
- சாலட் கிரீம் - 1 1/2 கப்
1. முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.
2. அன்னாசிப் பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து பிழிந்து சக்கையை நீக்கி விட்டு வடிக்கட்டி சாறு எடுத்துக் கொள்ளவும்.
3. செலரித் துண்டுகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் முட்டைக்கோஸ், செலரித் துண்டுகள்[Celery], அன்னாசி பழச்சாறு, உப்பு, மற்றும் சாலட் கிரீம் சேர்த்து கலந்து ஃப்ரிஜில் குளிர வைக்கவும்.
5. சிறிது நேரம் கழித்து எடுத்து பரிமாறவும்.சுவைக்க ருசியாக இருக்கும்.
*****************************************************
No comments:
Post a Comment